News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் (page 6)

Category Archives: விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து சஹீட் அப்ரிடி அதிரடியாக நீக்கம்

ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து சஹீட் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்து சென்று 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்ரிடி சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் பயிற்சியாளர் வக்கார் யூனுசுக்கும் அப்ரிடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Read More »

இலங்கை முதன் முதலாக அறிமுகப்படுத்தும் SLPL T20 கிரிக்கட் சுற்றுப் போட்டி!

இந்தியாவில் நடைபெற்று வரும் IPL போன்று இலங்கையிலும் இனிவரும் காலங்களில் SLPL T20 சுற்றுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  பஸ்நாஹிர, கந்துரட்ட, நெகேனஹிற, ருஹுன, உத்துர, ஊவா மற்றும் வயம்ப ஆகிய ஏழு அணிகளாகப் பிரிக்கப்பட்டு  நடாத்தப்படவுள்ளன.  இப்போட்டிக்கான அணித்தலைவர்களாக சங்ககார, மஹேல, சனத், வாஸ், தில்ஷான், அப்ரிடி, விட்டோரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணிகளுக்கான இலாஞ்சனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி வீரர்களும் ஏனைய இந்திய, அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்க அணி வீரர்களும் இதில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டிகளில் அதிகமான போட்டிகள் மாலை 4 ... Read More »

HOLCIM FA CUP – 2011 உதைப்பந்தாட்டப் போட்டிகளில் – திஹரிய யூத்

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் HOLCIM FA CUP – 2011 உதைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமானது. இப்போட்டியில் எமது ஊரை பிரதிநிதித்துவப்படுத்தி திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் விளையாடியது. அந்த வகையில் திஹாரிய யூத் முதலாவது போட்டியாக ஏப்ரல் 9 ஆம் திகதி கொழும்பு எவரடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் போட்டியிட்டு 7-2 என்ற ரீதியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது. இப்  போட்டியில் திஹாரிய யூத் ... Read More »

IPL லில் இருந்து ஷேன் வோன் விலகுவதாக அறிவிப்பு.

ஐ.பி.எல்., டுவென்டி – 20 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐ.பி.எல்., சீசன் 4 போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு இனிமேல் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. தற்போது ஷேன் வோன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் லில் ராஜஸ்தான் ராயல் அணியின் பயற்சியாளர் மற்றும் கேப்டனான ஷேன் வார்னே ஐ.பி.எல் லில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.  ஐ.பி.எல் லில் அடுத்த ... Read More »

எனது மகனை கிரிக்கெட் வீரனாகுமாறு கட்டாயப்படுத்தமாட்டேன்: சச்சின்

நான் கிரிக்கெட் வீரனாக இருப்பதால் எனது மகனையும் அதே துறையில் வர வேண்டுமென கட்டாயப்படுத்த மாட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது: 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எனக்கு பெரிய சந்தோஷத்தையும், இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும், அளவிட முடியாத ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. இப்போது 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எனது மகனுக்கு அதே போன்றதொரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக அவனும் கிரிக்கெட் வீரனாக வேண்டுமென வற்புறுத்த ... Read More »

Scroll To Top