News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் (page 5)

Category Archives: விளையாட்டுச் செய்திகள்

அல் அஸ்ஹர் ஆரம்பப் பிரிவு இல்ல விளையாட்டுப் போட்டியில் Emerald இல்லம் வெற்றி..

அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் இல்ல விளையாட்டுப் போட்டி  இன்று காலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.  Emerald , Sapphire ,  Diamond , ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில்  Emerald  இல்லம் வெற்றிபெற்றது.  இன் நிகழ்விற்கு  கௌரவ அதிதியாக பிரபல தொழிலதிபர் மல்வானையைச் சேர்ந்த அல் ஹாஜ் இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார். Read More »

அஸாபிர் மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் நாம்புளுவ அணி வெற்றி…

ஜம்மிய்யத் தளபாவின் சிறுவர் பகுதியான அஸாபிர் மாணவர்களுக்கிடையிலான  கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று காலை 9  மணியளவில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி திஹாரிய அஸாபிர் மாணவர்களுக்கும் நாம்புலுவ பஸ்யால அஸாபிர் மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இப் போட்டியை ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் திஹாரியக் கிளை ஏற்பாடு செய்து நடாத்தியது. மாணவர்களுக்கிடையே வேற்றுமைகளைப் போக்கி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்கும், வெற்றி தோல்விகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவுமே   இது போன்ற நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அஸாபிர் பயிற்சிநெறி பொறுப்பாளர் சகோதரர் அப்ரார் (நளீமி) தெரிவித்தார். இன்று ... Read More »

பிரீமியர் லீக் கிண்ணத்தை தவறவிட்டது திஹாரிய யூத்….

திஹாரிய யூத் கலந்துகொண்ட பிரீமியர் லீக் (பிரிவு 03 ) உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் காலி கெடேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் திஹாரிய யூத் விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது.  இன்றைய போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. போட்டி ஆரம்பத்திலேயே காலி கெடேரியன்ஸ்  விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பதிவி செய்தது. அதனைத் தொடர்ந்து போட்டி மிகவும் விறுவிருப்பாக நடைபெற்றது, என்றாலும் திஹாரிய யூத் வீரர்களுக்கு போட்டிவின் இறுதி ... Read More »

பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்கு திஹாரிய யூத் தகுதி.

திஹாரிய யூத் கலந்துகொண்ட பிரீமியர் லீக் உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டி இன்று மன்னார் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 4 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மன்னார் St.Luicios விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது.  இன்றைய போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது.  குறித்த கால எல்லை முடிவடையும் தருவாயில் இரு அணிகளும் 1 கோல்கள் வீதம் பெற்றிருந்ததால் .  வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சுற்று இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திஹாரிய யூத் தனக்கு வழங்கப்பட்ட பெனால்டி சுற்றில் ... Read More »

இபாமின் அதிரடி ஆட்டத்தால் பிரீமியர் லீக் இரண்டாவது போட்டியிலும் திஹாரிய யூத் வெற்றி!

திஹாரிய யூத் கலந்துகொண்ட இரண்டாவது பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டி இன்று திம்பிரிகஸ்யாய எட்வேர்ட் ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் திம்பிரிகஸ்யாய பிரமில் விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது. இன்றைய போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய இபாம் இம்மூன்று கோல்களையும் பெற்றுக்கொடுத்தார் . பிரீமியர் லீக் போட்டிகளில் திஹாரிய யூத் கலந்துகொண்ட முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய ஒபேசேகரபுற விளையாட்டுமைதானத்தில் சமில் விளையட்டுக்கழகத்திற்கு எதிராக நடைபெற்றது. இப்போட்டியில் 3 – 2 ... Read More »

தென் ஆபிரிக்கா அணியின் புதிய தலைவராக ஹசீம் அம்லா நியமனம்

சர்வதேச ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தென் ஆபிரிக்கா அணியின் தலைவராக ஹசீம் அம்லா பெயரிடப்பட்டுள்ளார். ஏ பி டி வில்லியஸ் உபாதை உள்ளானதை அடுத்து அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கான தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போது நடைபெற்றுவரும் சம்பியன் லீக் தொடரில் ரோயல் சலஞ்ஜஸ் பெங்களூர் அணிசார்பாக விளையாடிய ஏ பி டி வில்லியஸ் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியிருந்தார். நன்றி: News 1st Read More »

2012 – 20 க்கு 20 உலகக்கிண்ணம் இலங்கையில்

2012 ஆம் ஆண்டு 20 க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரை இலங்கையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.  இது சம்பத்தமாக அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த புதன் கிழமை கொழும்பில் நடைபெற்றது.  இன் நிகழ்வில் ஐ.சீ. சீ யின் 20 க்கு 20  உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அட்டவணையும், உத்தியோகபூர்வ இலச்சினையும் வெளியிடப்பட்டன. ஐ.சீ. சீ யின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹாருன் லோர்கட், இலங்கை கிரிக்கெட் உயர் அதிகாரிகள், மற்றும் 20 க்கு 20 உலகக்கிண்ணப் போட்டியின் இலங்கை அணித்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Read More »

தோனிக்கு இங்கிலாந்து வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கிலாந்தின் லெய்செஸ்டெர் தெ மோன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கௌரவக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.  செவ்வாய்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தின் லெய்செஸ்டர் அணியுடனாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்குகொண்ட நிலையிலேயே தோனிக்கு இக்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும் இதில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. சுரேஷ் ரைனா கேப்டன்ஷிப் செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்தது. ... Read More »

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இருந்து இரு மாணவர்கள் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு !

SAF Games ( South Asian Federation) – 2011 இற்கு தெரிவாகியிருக்கும் 16  வயதுக்கு குறைந்த  இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில், அதிபர் ஜனாப் M.T.M தௌசீர் அவர்களின் தலைமையில் இயங்கும்  திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இப்பாடசாலையின் விளையாட்டுத் துறைத் தலைவராக ஜனாப் M.I.M. ரூமி ஆசிரியர் கடமையாற்றுகிறார்  என்பது குறிப்பிடத்தகது. திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரபல உதைபந்தாட்ட பயிற்ருவிப்பாளர், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் ஜனாப் பஹுமி PTI AF –AFC “C” license Coach   பயிற்ருவிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் பயிற்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் பதினாறு வயதுக்கு குறைந்த ... Read More »

நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை!

  பிரிட்டனின் டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீற்றர் தூரத்தை நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை உலக கின்னஸ் சாதனையிலும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.   எதிர்காலத்தில் இந்த சிறுமி மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி டேவின் சாதனை அளவை வேறு யாரும் இந்த வயதில் நிகழ்த்தவில்லை. எனவே அவர் சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்து ... Read More »

Scroll To Top