News Headlines
You are here: Home » வினோதம்

Category Archives: வினோதம்

ஸ்பைடர் மேன் கொழும்பில் – Photos

spyderman_001

புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் கொழும்பு மாநகர சபை பகுதியில் இன்று சாசகங்களில் ஈடுபட்டார். இலங்கையில் திரையிடப்பட உள்ள ஆங்கில திரைப்படம் ஒன்றின் பிரசாரத்திற்காக ஸ்பைடர் மேன் மற்றும் அவருடன் சாகசங்களில் ஈடுபடும் நபர்களை திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் ஒன்று அழைத்து வந்துள்ளது. நகைச்சுவை கலந்த சாகச வீரராக ஸ்பைடர் மேன் சித்தரிக்கப்படுகிறார். அமெரிக்கரான ஸ்டென்லி என்ற எழுத்தாளரும், ஸ்டீவ் டிட்கோ என்ற சித்திர கலைஞரும் இணைந்து 1962 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினர். ஸ்டென்லியின் சொத்து மதிப்பு 5 கோடி ... Read More »

குடிகாரன் ஸ்பெஷல் – வித்தியாசமான மதுபானங்கள்

enhanced-buzz-20582-1349278772-5_copy

மதுபானங்கள் மீது மோகம் உள்ளவர்களின் வீதத்தை கண்டறிய கணிப்பீடு நடத்தினால் உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் அதனை விரும்பி அருந்துபவர்களாகவே இருப்பர். மதுபானங்களுக்கு அப்படியொரு வரவேற்பு. நம்நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் கல்யாண வீடாகட்டும் மரண வீடாகட்டும் சாஸ்த்திர சம்பிரதாயங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு மதுவுக்காகவே அலையும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்துக்கொண்டிருக்கும். அப்படியானவர்களுக்குத் தான் இந்த விசேட மதுபான வகை   பாம்பு வைன் (Snake Wine) உலகிலேயே இந்த ஒயின் மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது ... Read More »

நூறு வருடங்களின் பின் நடந்த அதிசயப் பயணம்

dsa

( Hisham Hussain, Puttalam Times ) சரியாக 100 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் 5 ஆம் திகதி நல்லிரவில் புகையிரதமொன்று சாரதி இல்லாமல் பயணித்துள்ளது. *இரண்டு புகையிரத எஞ்சின்களும் மாளிகாவத்தை புகையிரத மேடையில் இருந்து பயணித்துள்ளது *அதுவும் ஒரே நாள் ஓரே நேரத்தில் ஒரே திசையை (கோட்டை) நோக்கி சென்றுள்ளது *இவ் இரண்டு சம்பவங்களிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை சாரதி இல்லாமல் புகையிரத என்ஞினொன்று தானியங்கியாகப் பயணித்ததைப் போன்று சரியாக அன்றைய திகதிக்கு நூறு வருடங்களுக்கு முன்னர், 1913 டிசம்பர் 02 ஆம் ... Read More »

தினமும் 10 சிகரெட்களை ஊதித்தள்ளும் ஆமை

turtle2

சீனாவில், வீட்டில் வளர்க்கப்படும் ஆமை ஒன்று, ஒரே நாளில், 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறது. எஜமானர் சிகரெட் தர மறுத்தால், வினோத ஒலியை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. சீனாவின், சேங்சுன் நகரைச் சேர்ந்த ஒருவர், சில ஆமைகளை வளர்க்கிறார். சில தினங்களுக்கு முன், ஒரு ஆமையின் கழுத்துப் பகுதியில், ஏதோ சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆமையின் வாயை பெரிதுபடுத்தி பார்த்த போது, உணவின் சிறு பகுதி, தொண்டையில் சிக்கியிருப்பது தெரிந்தது. இதனால், தொண்டையில் புண் ஏற்பட்டு, ஆமை உணவு உண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆமையின் ... Read More »

உலகின் மிகப்பெரிய பூ பெல்ஜியத்தில் மலர்ந்தது

w-6

உலகில் மிகப்பெரிய மற்றும் துர்நாற்றம் வீசும் மலர் பெல்ஜியமின் தேசிய தாவரவியல் பூங்காவில் மீண்டும் ஒரு முறை பூத்துள்ளது. இதனை பார்க்க நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்துள்ளனர். அரிதாக பூக்கும் டைட்டன் அரும் என்ற இந்த மலர் 2.44 மீற்றர் (8 அடி) உயரத்துக்கு வளரும். இது கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின் மூன்றாவது முறையே தற்போது பூத்துள்ளது. அழுகிய இறைச்சி வாடையை ஏற்படுத்துவதால் இதனை ‘பிணப் பூ’ என்றும் அழைக்கின்றனர். எனினும் அதனது வாடை மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்ந்திழுக்கிறது. ... Read More »

நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

images

(AD) யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்தவேளை இளைஞனை நாய் துரத்தியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கிச் சென்று நாயைக் கடித்துக் குதறியுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த இளைஞரும் காயமடைந்துள்ளார். இரத்தப் போக்கு கரணமாக நாயைக் ... Read More »

கம்பஹவை மறந்த ‘உடரட்ட மெனிக்கே’ !

images

(TM) பதுளை- கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ‘உடரட்ட மெனிக்கே’ புகையிரத வண்டியானது கம்பஹா புகையிரத நிலையத்தில் தரிக்கமால் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மேற்படி புகையிரத நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பயண நேர அட்டவணையின்படி மேற்படி வண்டியானது கொழும்பிலிருந்து காலை 9.45 மணியளவில் புறப்பட்டு 10.15 மணியளவில் கம்பஹா புகையிரத நிலையத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால், கம்பஹா புகையிரத நிலையத்தில் தரித்து நிற்காமல் இவ் வண்டி அதனை கடந்து சென்றுள்ளது. பின்னர் இது தொடர்பில் கம்பஹா ரயில் ... Read More »

நியூஸிலாந்தில் நீர் தங்கமாக மாறும் அதிசயம் விரைவில்…..

348gold

நியூஸிலாந்தில் நில நடுக்கத்தினால் நிலத்தடி நீர் விரைவாக தங்கமாக மாறி வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தினால் புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறை சார்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் மூலமே நிலநடுக்கத்தினால் நியூஸிலாந்தில் விரைவாக நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் நிலத்தடி நீர் மிக அதிகளவான அழுத்தத்திற்குள்ளாகிறது. பின்னர் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. தொடர்ந்து நீரானது தங்கமாக மாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீர் தங்கமாக மாறும் ... Read More »

மனைவியுடன் பஸ்ஸில் பயணித்தவரின் காதை கடித்துத் துப்பிய கணவன்

824595710ear2

தனது மனையுடன் பஸ்ஸில் பயணித்த பிறிதொரு நபரின் காதை கடித்து துப்பிய நபர் ஒருவரை பொலிஸர் கைது செய்துள்ளனர். மரண வீடொன்றில் கலந்து கொள்வதற்காக தம்புள்ளையிலிருந்து கொழும்பு நோக்கி, கைது செய்யப்பட்டவரின் மனைவி தனது மச்சாள் ஒருவருடன் சென்றுள்ளார்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் மீண்டும் பஸ்ஸில் இன்று (17) காலை வீடு திரும்பும்போது பொலன்நறுவையைச் சேர்ந்த ஒருவர் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்ணுடன் சென்ற மச்சாள் அவளது கணவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.  இதன் பின்னராக அப்பெண்ணின் கணவன் பஸ்நிலையத்திற்குச் சென்று ... Read More »

பாடசாலையை மூடிவிட்டு, ஆசிரியையின் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள்.

Unknown

காலி, அல்பிட்டிய பொத்திவல மகா வித்தியாலயம் திடீரென மூடப்பட்ட சம்பவத்திற்கு பெற்றோர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் திருமணம் நேற்று (14) இடம்பெற்ற நிலையில் அவ் வைபவத்திற்கு கலந்து கொள்வதற்காக பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் 2,500 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் அதிபர் கூறுகையில்: பாடசாலை ஆசியர்களில் அதிகமானொர் திருமண வைபவத்திற்கு செல்வதற்கு தீர்மானித்த நிலையில் பாடசாலை நேற்று மாத்திரம் மூடப்பட்டதாக தெரிவித்தார். நேற்றைய தினத்திற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் எனவும் ... Read More »

Scroll To Top