News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 4)

Category Archives: திஹாரிய செய்திகள்

திஹாரிய சிங்கள மொழி சரீஆ கலாபீட நேர்முகப் பரீட்சை இம்மாதம் 27 இல்!

images

திஹாரியில் இயங்கும் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான சரீஆ கலாபீடம் புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 2013 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, உயர் தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்கள் இக்கலாபீடத்தில் நடைபெறும் ஐந்து வருட சரீஆ பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார். இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தன்வீர் அகடமி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 0773763830 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது ... Read More »

கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் விருப்பு வாக்குகளில் மீண்டும் குழறுபடி.

download

கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட விருப்பு வாக்குகள் பட்டியலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் குழறுபடிகள் நிகழ்துள்ளது. பெயர் பட்டியலில் வாக்காளர்களுக்குரிய இலக்கங்கள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வேட்பாளர்கள் கட்சியின் உயர் பீடத்துடன் கலந்தாலோசனை நடாத்தி வருவதாகவும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் திஹாரிய நியூஸ் இணையத்திற்கு தெரிவித்தார். இதேவேளை கடந்த 2004 ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும்  முன்னால் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் மற்றும் வேட்பாளர் S.H.M முனாஸ் ஆகியோருக்கிடையிலான விருப்பு ... Read More »

திஹாரியில் வாக்குப் பதிவுகள் மந்த கதியில் …… – Photos

THR 03

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள்களின் வாக்குப் பதிவுகள் தற்பொழுது நடைபெற்றுகொண்டிருகின்றது. காலை 7 மணி ஆரம்பமான இந்த வாக்குப் பதிவுகள் மாலை 4 மணிவரையில் 4253 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும். இதேவேளை திஹாரிய அல்-அஸ்ஹர் மற்றும் தாருஸ்ஸலாம் பாடசாலைகளில் மக்கள் தமது வாக்குகளை பதிவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இன்று பிற்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதியில் திஹாரியில் 40% வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடமையில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர். Read More »

கற்றுகொண்டே பணம் சம்பாதிக்கும் சந்தர்ப்பம் பெற்ற திஹாரிய மாணவர்களுக்கு உடன்படிக்கை பத்திரம் வழங்கும் நிகழ்வு.

MRM FO 04

திஹாரிய RMR மன்றத்தின் தலைமையில் PININDU WED SOLUTION நிறுவனம் நடாத்தும் கணனி வகுப்பில் இணைத்த மாணவர்களுக்கு, கல்வி கற்பதனூடாக பணம் சம்பாதிக்கும் சந்தர்ப்பத்தை பெற்ற திஹாரிய மாணவர்களுக்கு உடன்படிக்கை பத்திரம் வழங்கும் வைபவம் இன்று நடைபெறாது. திஹாரிய ஊர்மனை அல் – இல்மா பாலர் பாடசாலையில் நடைபெற இந்த வைபவத்தில் 7 மாணவர்களுக்கு இந்த உடன்படிக்கை பத்திரம் வழங்க்கப்பட்டதுடன், மேலும் தாருஸ்ஸலாம் ஆரம்பப் பிரிவு பாடசாலை கல்விகற்கும் வறிய மாணவர்கள் 5 பேருக்கு PININDU WED SOLUTION நிறுவனம் நடாத்தும் கணணி வகுப்பில் ... Read More »

திஹாரிய அங்கவீனர் நிலைய மாணவர்களின் “சிறுவர் சந்தை” – Photos

HCUP 01

திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் “சிங்கிதி பொல” சிறுவர் சந்தை இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணியளவில் அங்கவீனர் நிலைய வளாகத்தில் ஆரம்பமானது. பிற்பகல் 12 மணிவரை இச் சிறுவர் சந்தை அங்கவீனர் நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.     இதேவேளை திஹாரிய சென்ட்ரல் பிளேஸ் வொண்டர் கிட்ஸ் சிறுவர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தையும் இன்று காலை 9 மணியளவில் ஊர்மனை பிரதேசத்தில் ஆரம்பமானது. இச் சந்தையும் பிற்பகல் 11:30 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த வாரம் திஹாரிய ஊர்மனை அல் -இல்மா ... Read More »

ஈரல் கரையும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள திஹாரிய சிறுமிக்கு உதவுங்கள்.

AAAA

திஹாரியை ஹிஜ்ரா மாவத்தை இல.464/1, வசிக்கும் சிறுமி பாதிமா அப்ரா ( 15 வயது) ஈரல் கரையும் நோயினால் (Liver Cirrhosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை A.R.M. இப்னு அவர்களின் அன்பு மகளாகிய இவருக்கு வெளிநாட்டில் உடனடியாக சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக 70 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண முச்சக்கர வண்டி ஓட்டுனரான நோயாளியின் தந்தைக்கு சத்திர சிகிச்சைக்கு செலவாகும் பணத்தை திரட்டுவது கடினமாக காணப்படுகிறது. ஆகவே தாரளமனம் படைத்தவர்கள் இந்த ... Read More »

ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர்ரின் ஜனாஸா திஹாரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

THR M A GAFOOR 01

பழம்பெரும் சினிமா ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் (M.A. Gafoor) அவர்களின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது ஜனாஸாவில் பிரபல கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   Read More »

திஹாரிய ஜம்மிய்யாக்கிளையின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014

1743628_514394812010856_1196086558_n

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் திஹாரிய கிளை ஏற்பாடு செய்த வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (27-02-2014) தூள்மலை அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் கிளைப் பொறுப்பாளர் சகோ. M.S.M. Sajath அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், குழுச் செயற்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட, அணிக்கு எழு பேர் அடங்கிய ஐந்து அணிகள் கொண்ட நட்புறவுப் போட்டியாக இது அமைந்திருந்தது. இவ் வருடாந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக திஹாரி ஈமானியா அரபுக் ... Read More »

திஹாரியைக் கடந்த சிங்கள ராவயவின் ஆர்ப்பாட்ட பேரணி – Photos

IMG-20140213-WA0003

மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று மாலை திஹாரிய நகரை வந்தடைந்தது. இதன் போது கொழும்பு கண்டி பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த்ததை அவதானிக்க முடிந்தது. கடந்த த 9ம் திகதி காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து ஆரம்பமான இப்பேரணி எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி மாளிகையைச் சென்றடையவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தினுள் மாடறுப்பு நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர்த் ... Read More »

சுதந்திர தினத்தை முன்னிட்டு திஹாரியில் சிரமதானமும் மரம் நடுகையும் Photos

jam 2

  இலங்கையின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04-02-2014) இலங்கை ஜமாஅதே இஸ்லாமி திஹாரி மன்றமும் ஜம்இய்யா திஹாரி கிளையும் இணைந்து  திஹாரி பண்டாரநாயக பிளேஸ் இல் அமைந்துள்ள அரசாங்க வைத்திய மருத்துவமனையை சிரமதானம் செய்து மரம் நடுகையையும் மேற்கொண்டது   காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 12 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. Read More »

Scroll To Top