News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 3)

Category Archives: திஹாரிய செய்திகள்

குனூத் ஓதுமாறு திஹாரி ஜம்இய்யதுல் உலமா பள்ளிவாசல்களுக்கு அறிவிப்பு

images

அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக திஹாரி ஜம்இய்யதுல் உலமா கிளை திஹாரியில் உள்ள சகல பள்ளிவாசல்களில்  மற்றும் வீடுகளில் ஐந்து நேரத் தொழுகையில்  குனூத் ஓதுமாறு வேண்டிக்கொல்வதாக   திஹாரி ஜம்இய்யதுல் உலமா கிளையின் தலைவர் மௌலவி ரிலா திஹரிய  நியூஸ் இணையத் தளத்துக்கு தெரிவித்தார் Read More »

திஹாரி அஸாபிர் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014 (Photos)

10325347_487393618029326_2689116369639344727_n

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் சிறுவர் பகுதியான Asaafir மாணவர்களுக்கான தரம் 6,7,8 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை நேற்று ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரிக் கிளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இந் நிகழ்வில் ஒரு உடட்பலமுள்ள மூஹ்மின் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தப்பட்டது. Read More »

ஜம்இய்யாவின் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு-Photos

10419612_258114957707987_1255086009_n

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தலபா) திஹாரிய கிளை வருடாந்தம் நடாத்தும் எப்படி பரீட்சைக்கு முகம் கொடுப்பது? என்ற இலவச கருத்தரங்கு (29-05-2014) அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மண்டபத்தில் இம்முறை க.பொ த சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக நடாத்தப்பட்டது. அஷ்ஷெய்க் ஆலிப் அலி (இஸ்லாஹி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் இலக்கைத் தீர்மானித்தல், எவ்வாறு கற்பது, ஞாபகம், மறதி, குறிப்பெடுக்கும் முறைகள் என பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read More »

திஹாரிய மற்றும் திஹாரிய அயல் கிராமங்களின் தொழிநுட்ப அபிவிருத்தியை முன்னிட்டு உதயமாகும் IIIT நிறுவனம்.

unnamed

இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் உலகின் வலிமைமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது யாவரும் அறிந்த உண்மை. திஹாரிய மற்றும் திஹாரிய அயல் கிராமங்களின் தொழிநுட்பத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் IIIT எனும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை மற்றும் ஆராய்ச்சி, அபிவிருத்தி, எனும் நோக்கத்தின் கீழ் தனது சேவைகளை முன்னெடுக்கவுள்ள இந்நிறுவனம் இம்மாதம் 31 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிறுவனத்தில் முதற்கட்டமாக Ordinary Grade In Information Technology எனும் பாடத்திட்டம் 10 & 11 ல் ICT பாடம் கற்கும் ... Read More »

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்!

TN Apple Icon

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ திஹாரிய நியூஸ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய நவீன உலகில் தொழிநுட்ப வளர்ச்சியின் பிரதான இடத்தை வகிக்கும் Smart Phone இன்று மக்களின் அத்தியவதிய தேவைகளில் ஒன்றாக காணப்படுகிறது. முழு உலகையும் ஒரு விரல் நுனியில் கொண்டுவந்த பெருமை இன்று Smart Phone களுக்கு காணப்படுகிறது. அந்தவகையில் Smart Phone னின் ஊடாக பாவனையாளர்கள் தமக்கு விரும்பிய சேவைகளை ஒரு விரல் அழுத்தத்தினால் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய ... Read More »

அல் -அஸ்ஹர் மாணவன் அஹ்சனின் ஜனாஸாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்-படங்கள்

THR 03

அல் -அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மாணவன் முஹம்மட் அஹ்சன் (13 வயது) அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5:30 மணியளவில் திஹாரிய ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது. இதன்போது ஜனாஸாவில் ஊர்மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டமை எம்மால் அவதானிக்க முடிந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திஹாரிய புளியமரத்தடி பள்ளிவாசல் பின்னால் அமைத்துள்ள ரம்புட்டான் மரத்தில் ஏறியபோது தவறி விழுந்த முஹம்மட் அஹ்சன் அன்றுமுதல் கோமா நிலையில் வைத்தியசாலை ICU வில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைகள் ... Read More »

அத்தனகல்ல பிரதேச சபையின் ஏற்பாட்டில் திஹாரியில் நடமாடும் சேவை!

fdag

அத்தனகல்ல பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று நாளை (24) சனிக்கிழமை காலை 8:30 மணிமுதல் திஹாரிய கண்டி வீதி வாராந்த சந்தை நடைபெறும் வளாகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் வரிப்பணம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மக்களுடைய அத்தியவதியத் தேவைகள் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. இதேவேளை இலவச குருதிப் பரிசோதனை, நீரிழிவு வியாதி, இருதய நோய்கள் உட்பட பல மருத்துவ சேவைகள் வதுபிடிவலை வைத்தியசாலை வைத்தியர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. அதேவேளை ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றும் குறித்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல ... Read More »

அஷ்கர் தஸ்லீம் எழுதிய “அறிவுலகம்” பொது அறிவுச் சஞ்சிகை!

ggg

வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் அஷ்கர் தஸ்லீம் எழுதிய “அறிவுலகம்” பொது அறிவுச் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. நாம் வாழும் இந்த யுகம், தகவல்கள் வெடித்துச் சிதறும் யுகம். ஆனால், அந்தத் தகவல்கள் எல்லாம் எமக்கு அவசியமனவைதானா? என்ற பெரிய கேள்வி நம்முன்னே எழுந்து நிற்கிறது. நம்மில் பலர் அவசியமற்ற தகவல்கள் பலவற்றை அறிந்து வைத்துக்கொண்டு அவற்றைக் கொண்டாட முனைகிறாரர்கள். பல நிகழ்ச்சிகளில், உரைகளில் இந்தப் பிரச்சினையை நாம் அவதானிக்க முடியும். ஓர் உரையை நிகழ்த்தும் போது அங்கு எவற்றை நாம் அந்த ... Read More »

அரசாங்க குடும்ப நல உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறமாட்டது.

images (3)

திஹாரியில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்க குடும்ப நல உத்தியோகத்தர்களின் ( Midwife )ஆர்ப்பாட்டம் நடைபெற மாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வந்த அரசாங்க குடும்ப நல உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இன்று ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசலின் முன்னால் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தாதிமார்களுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களினால் வழங்ககப்படும் சேவைகளை பயிற்றிவிற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளராக அரச ... Read More »

திஹாரியில் நாளை அரசாங்க குடும்ப நல உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம்!.

download

திஹாரியில் இயங்கும் இரு கில்னிக் களின் ஏற்பாட்டில் அரசாங்க குடும்ப நல உத்தியோகத்தர்களின் ( Midwife )ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை ஊர்மனையில் நடைபெறவுள்ளது. காலை 9 மணிமுதல் ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசலின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திஹாரிய பிரதேசத்தில் சேவையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவர் திஹாரிய நியூஸ் இணையத்துக்கு தெரிவித்தார். அரச தாதிமார்களுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களினால் வழங்ககப்படும் சேவைகளை பயிற்றிவிற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளராக அரச தாதிமார்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் ... Read More »

Scroll To Top