News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 21)

Category Archives: திஹாரிய செய்திகள்

சென்றல் பிளேஸ் இல் நடந்த வாகன விபத்தில் தந்தையும் மகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று 02-07-2011 மாலை 5.30  மணியளவில் திஹாரிய சென்றல் பிளேஸ் தபால் கந்தோருக்கு முன்னால்  இடம் பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது மகளின் பகுதிநேர வகுப்பு முடிவுற்று மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த சமயத்தில் எதிர்பாரத விதத்தில் வேகமாக வந்த கெப் வண்டி ஒன்று  மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரும்  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் பல் ஒன்றையும் விபத்து நடந்த  இடத்தில் எம்மால் அவதானிக்கமுடிந்தது. மோதுண்ட கெப் வண்டியில்  ... Read More »

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று திஹாரியில் ஆரம்பம் (புகைப்படங்கள் இணைப்பு)

சுகாதார அமைச்சு மற்றும் டெங்கு ஒழிப்புத் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 26 ஆம் திகதிவரையான இந்த தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தின் செயற்பாடுகள் நேற்று நுகேகொடயில் சுகாதார அமைச்சர் மைத்திரிபா சிறிசேன தலைமையில் நடைபெற்றன.   தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு முப்படையினர் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஒத்துழைப்பு வழங்குவர். மக்கள் சுகாதார பரிசோதகர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த ... Read More »

திஹாரியில் இலவச எலும்பு நலப் பரிசோதனை முகாம் .

அன்லீன் நிறுவனத்தின் அனுசரனையுடன் நவலோக வைத்தியசாலை இணைந்து வழங்கும் இலவச எலும்பு நலப்  பரிசோதனை இன்று 26-05-2011 காலை 10 மணி முதல் மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசலின் முன்னால் இரண்டாவது முறையாகவும் இடம் பெற்றது. இன்றைய இந்த மருத்துவ முகாமில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தமது எலும்புகளை பரிசோதனை செய்துகொண்டதாக அன்லீன் நிறுவனத்தின் மருத்துவ முகாம் பொறுப்பாளர் திஹாரிய நியூஸ் இற்கு தெரிவித்தார்.  இச் சிகிட்சையை நேரடியாக  நவலோக மருத்துவ மனையில் பெறுவதனால் சுமார் 3800 ரூபா வரை ... Read More »

மின்னல் தாக்கியதால் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சேதம்

இன்று காலை தாக்கிய கடும் மின்னல் காரணமாக திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கணணிக்கூடத்தின் மின்மானி (Electricity Meter Box) உட்பட இன்னும் சில மின்சார உபகரணங்கள்  மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள் சிலவற்றிக்கும்  சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கும் சமயத்தில் பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதும் எந்த ஒரு ஆபத்துக்களும் மாணவர்களுக்கு ஏற்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்தார். மின்னல் தாக்கத்தில் சேதமடைந்த சில உபகரணங்கள்  மற்றும் கட்டிடங்களின் புகைப்படங்கள்.  Read More »

அரசின் 1000 இடை நிலைப் பாடசாலைகளை மேன்படுத்தும் திட்டத்திற்க்கு திஹாரிய வாழ் மக்களின் பூரண ஆதரவு

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த மே மதம் 18 ஆம் திகதி கல்லூரி அதிபர் ஜனாப் M.T.M தௌஸீர் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சரண குணவர்தன அவர்களின் சிபாரிசில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 1000 இடை நிலைப்  பாடசாலைகளை மேன்படுத்தும் திட்டத்தில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மை, தீமைகளை பெற்றோருக்கும் ஊர்மக்களுக்கும் விளக்கும் பிரதான நோக்குடன் ... Read More »

ஜமாஅத்தே இஸ்லாமியின் திஹாரிய உப பிராந்தியம் ஏற்பாடு செய்த "இஜ்திமா"

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  திஹாரிய உப பிராந்தியம் ஏற்பாடு செய்த வருடாந்த இஜ்திமா நேற்று கல் எளிய அல் மஸ்ஜிதுல் சுப்ஹாணி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது  “அறிவியல் உலகை மூடியிருக்கும் அறியாமை இருள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் கஹடோவிட, நாம்புளுவ  உட்பட பல பிரதேசங்களிலிருந்து மக்கள் கலந்து சிறப்பித்தனர்.  அறியாமை ஒரு வழிகேடு என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் எம். ஏ. எல். எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் வஹியின் ஒளியில் அறிவியல் என்ற தலைப்பில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ... Read More »

திஹாரியிலும் வெசக் கொண்டாட்டம்……

2600 சம்புத்த ஜயந்தி வெசக் கொண்டாட்டங்கள் இம்முறை உலகளாவிய ரீதியிலுள்ள பெளத்த மக்கள் வெகு விமர்சையாகக்  கொண்டாடிவருகின்றனர் . அந்த வகையில் இலங்கையிலும் ஜனாதிபதியால் வெசக் வாரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலும் வெசக் விழாக்கள் களைகட்ட ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து மூவின மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழும் எமது அழகிய திஹாரிய கிராமத்தில் மீண்டும் ஒருமுறை சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் வண்ணம் பெளத்த சகோதரர்கள் 2600 சம்புத்த ஜயந்தி வெசக் கொண்டாட்டத்தை  மிகவும் மகிழ்ச்சியாக கொண்டடிவருகின்றார்கள். வெசக் தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் வெசக் கூடுகளாலும் அழகிய வர்ண ... Read More »

அல் அஸ்ஹர் ம. க. பழைய மாணவர் M.H.M நாஸிக் நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்.

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் M.H.M நாஸிக் அவர்கள் நீதி அமைச்சர் கௌரவா ரவுப் ஹகீம் அவர்களின் ஒருங்கிணைப்பாளராக (Co-ordinater) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராகவும், SLMC திஹாரிய மத்திய குழுச்  செயலாளராகவும், SLMC Polebero  (பொளிபிரோ) உறுப்பினராகவும் கடமையற்றி வரும் இவர் முன்னைனால் திஹாரிய பள்ளிவாசல் சம்மேளனத்தின்  உப செயலாளராகவும் கடமையற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

திஹாரியின் முதலாவது இணைய செய்திச் சேவை

Thihariya Network - Logo

அஸ்ஸலாமு அழைக்கும்    எல்லாப் புகழும்  அல்லாஹ்விற்கே !அல்ஹம்துலில்லா! நாளுக்கு நாள் வியத்தகு பல மாற்றங்களை ஏற்படுத்திவரும் இன்றைய 21ஆம் நூற்றாண்டில்  உலகை ஆட்டிப்படைக்கக்கூடிய சக்தியாக ஊடகத்துறை விளங்குகிறது. இந்த நவீன ஊடகத்துறையானது எமது இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மாற்றங்களிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.  அந்த வகையில் நமது திஹாரிய நியூஸ் நம் ஊர்மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றிலிருந்து ஊடகப்பயணத்தில் உத்தியோகபூர்வமாக கால்ப்பதிக்கிறது. திஹாரிய ஊடக வரலாற்றில் புதியதொரு புரட்சிப் பயணத்தை திஹாரிய நெட்வேர்க் கடந்த 2010ஆம் ... Read More »

Scroll To Top