News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 20)

Category Archives: திஹாரிய செய்திகள்

நோன்புப் பெருநாள்! களைகட்டியது திஹாரிய…….

புனித நோன்புப்பெருநாள் தினத்திற்க்கு இன்னும் ஓர் இரு தினங்களே எஞ்சி இருக்கும் தருவாயில், திஹாரிய ஊர்மனை சந்தி பெருநாள் கடைகளால் களைகட்டி இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.  இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள், பாதணிகள், அலங்காரப்பொருட்கள் என எல்லாவகையான பொருட்களையும் ஓரே இடத்தில் கொள்வனவு செய்துகொள்ளக்கூடிய வகையில் இக்கடைகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  திஹாரிய நியூஸ் கேமராவில் பதிவான சில பெருநாள் கடைகள் உங்களுக்காக…… Read More »

ஜம்மிய்யாவின் வருடாந்த இப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் வருடாந்த இப்தார் நிகழ்ச்சி ஹிஜ்ரா மாவத்த தன்வீர் அகடமியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்க்கு 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.  Read More »

அத்தனகல்லையில் விபத்து, திஹாரிய வாலிபர்கள் இருவர் காயம்.

இன்று இரவு 7 மணியளவில் அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மோட்டார் சைக்கிளின் டயர் வழுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது என விபத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள், விபத்தில் காயமடைந்த ஒருவர் சேர் ராசிக் பரீத் மாவத்தையை சேர்ந்த ஜனாப் ரமீஸ் (வேன் டிரைவர்) அவர்களின் மகன் ருமைஸ் வதுபிடுவள வைத்தியசாலையிலும், கருவத்தோடத்தைச் சேர்ந்த ஜனாப் முனீர் அவர்களின் மகன் ருமைஸ் வதுபிடுவள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிட்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார். Read More »

"LANDMARK" திஹாரியின் தடம். முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக திஹாரியின் வரலாற்றை வீடியோ ஆவணப்படமாக்கும் எமது முயற்சி ! “LANDMARK” திஹாரியின் தடம் Thihariya Alert 1st, www.thihariyanews.com சேவைகளை உங்களுக்கு வழங்கும் Thihariya Network இன் இந்த முயற்சி வெற்றியளிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.  Read More »

நேற்று நடைபெற்ற உள்ளூர் ஆட்சிமன்றத் தேர்தலில் திஹாரியில் போட்டியிட்ட இருவரும் வெற்றி

நேற்று 23 திகதி நடைபெற்ற உள்ளூர் ஆட்சிமன்றத் தேர்தலில் திஹாரியில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக குஜி ஹனீபா அவர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அஷ்ரப் அவர்களும் போட்டியிட்டார்கள்.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட குஜி ஹனீபா மொத்தம் 7491 வாக்குகளைப்பெற்று 4 ஆம் இடத்தையும்,  ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட அஷ்ரப் 3305  வாக்குகளைப்பெற்று 4 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் முழுமையான விபரம்  பதிவு செய்யப்பட்ட வாக்காளர் : 125,132 மொத்த வாக்களிப்பு : 78,812 செல்லுபடியான வாக்குகள் : 75,149 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 3,663 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  : 54,363 வாக்குகள், 17 ஆசனங்கல் ஐக்கிய தேசியக் ... Read More »

கலகேடிஹேன மீன் சந்தைக்கு முன் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பல மணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.

இன்று காலை பெய்த காற்றுடன் கூடிய மலையில் கலகேடிஹேன மீன் சந்தைக்கு முன் பாரிய மரம் ஒன்று முறிந்து பாதையின் குறுக்கே விழுந்ததில் கொழும்பு கண்டி வீதியில் பல மணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மாற்று வழியாக திஹாரிய ஊடக கலகேடிஹேன மற்றும் யக்கல வீதியை இணைக்கும் மாற்று பாதைகளை பயன்படுத்தினர்.       Read More »

கலகேடிஹேனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேன் மோதியதில் மூவர் வைத்தியசாலையில்

இன்று மாலை 3.45 மணியளவில் கலகேடிஹேன ஹெலா குலோத்திங் இற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.   வேனிட்க்கு சிறிதளவு சேதங்கள் ஏற்பட்டபோதும் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான இரு வண்டிகளும் சகோதர இனத்தவர்களின் என்பது குறிப்பிடத்தக்கது.    புகைப்படங்கள்:  ஷையாப் – கலகேடிஹேன செய்தியாளர்  Read More »

"தஃவா முஅஸ்கர்" மேற்குப் பிராந்திய இளைஞர் மகாநாடு திஹாரியில் (புகைப்படங்கள் இணைப்பு)

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மேற்குப் பிராந்திய இளைஞர்  மகாநாடு  “தஃவா  முஅஸ்கர்” நேற்று மாலை திஹாரிய தூல்மலை அங்கவீனர் நிலையத்தின் கேட்போர்கூட அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. “பொறுப்புக்களுக்கு முன்னால் இன்றைய இளைஞன்”  என்ற தலைப்பில் நடைபெற்ற இம் மகாநாட்டில் அஷ்ஷெய்க் அfப்பான் (நளீமி),  அஷ்ஷெய்க் ஹுசைன் (நளீமி) ஆகியோர் விசேட உரையாற்றினார்கள். இன் நிகழ்வின் மற்றுமோர் விசேட அம்சமாக பஹ்ரேன் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன்  மேற்குப் பிராந்திய பாடசாலைகளுக்கிடையில்  நடாத்திய பொது ... Read More »

THIRD EYE! அறிவியல் கண்காட்சி இன்று திஹாரிய கிரசன்ட் சர்வதேச பாடசாலையில் ஆரம்பமானது. (புகைப்படங்கள் இணைப்பு)

THIRD EYE! அறிவியல் கண்காட்சி இன்று திஹாரிய கிரசன்ட் சர்வதேச பாடசாலையில் ஆரம்பமானது. இக் கண்காட்சியில் பிரதம அதீதியாக  சீதுவா செய்லான்  சர்வதேச பாடசாலையின் அதிபர் ஜனாப் M. ராசிக் (BSc) அவர்கள் கலந்து கொண்டார்கள். விசேட அதீதிகளாக கம்பஹா மாவட்ட ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஜனாப்  M.Y.M. கஸ்ஸாலி அவர்களும், கம்பஹா மாவட்டத்தின் வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப்பணிப்பாளர்  கௌரவ லலித் குமார அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கிரசன்ட் சர்வதேச பாடசாலையின் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்  கண்காட்சி இன்றும் நாளையும் ... Read More »

பஸ்ஸியாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி கலகேடிஹேனையில் விபத்துக்குள்ளானது.

பஸ்ஸியாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 6.15 மணியளவில் கலகேடிஹேன ஹெலா குலோத்திங் இற்கு முன்னால் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளாகும் சமயத்தில் முச்சக்கரவண்டியில் 5 பேர் இருந்ததாகவும், யாருக்கும் பாரிய காயங்கள் இல்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். என்றாலும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது.     புகைப்படங்கள்:  ஷையாப் Read More »

Scroll To Top