News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 2)

Category Archives: திஹாரிய செய்திகள்

மைத்திரியை ஆதரித்து திஹாரியில் மாபெரும் பிரசாரக் கூட்டம் – படங்கள்

THR 09

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று திஹாரிய ஊர்மனையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப், அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், பிறூஸ் ஹாஜி, ஹர்சன ராஜகருணா, சரண லால், பிரபல பாடகர் சிலி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிபிடத்தக்கது. (ஸ)     Read More »

குஜி ஹனீபாவின் ஆதரவும் மைத்திரியிற்கு – படங்கள்

SAM_0655

குஜி ஹனீபாவின் ஆதரவும் மைத்திரியிற்கு – படங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக குமாரதுங்கவை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா தெரிவித்தார். இதேவேளை கம்பஹா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நகரசபை பிரதி முதல்வர் ஏ.பஸ்நாயக மற்றும் நகரசபை உறுப்பினர் w. ... Read More »

திஹாரிய, தூல்மலை ஆற்றில் காணாமல் போன சிறுவனின் ஜனாஸா மீட்பு

THR 02

திஹாரிய, தூல்மலை ஆற்றில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன சிறுவனின் ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நீராடச் சென்று காணாமல் போன குறித்த சிறுவனை தேடும் பணிகள் நேற்று இரவுவரை இலங்கை கடற்படை சுழியோடிகளால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் மீண்டும் கடற்படை சுழியோடிகள் சிறுவனை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீரில் மூழ்கிய இடத்திற்கு அறுகாமையில் மறைந்து காணப்பட்ட சிறுவனின் ஜனாஸாவை கடற்படை சுழியோடிகள் மீட்டனர். படங்கள் – பஸ்மில் அக்ரம் இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்… ... Read More »

தூல்மலை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனைக் காணவில்லை

download

திஹாரிய தூல்மலை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; கொழும்பிலிருந்து, திஹாரிக்கு வந்த குறித்த சிறுவனின் சகோதரன் மற்றும் தகப்பன் மூவரும் தூல்மலை ஆற்றில் குளிக்கச் சென்ற வேலை மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வேலை, தகப்பனும், அவரது ஒரு மகனும்பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (ஸ) Read More »

அல்-அஸ்ஹர் 2002 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் இப்தார்

DSCF3376

அல்-அஸ்ஹர் 2002 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் இப்தார் வைபவமும், வருடாந்த ஒன்றுகூடலும் இன்று இடம்பெற்றது. நாப்பிரித்தை ஹைபா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில் தம்முடன் ஒன்றாகக் கல்வி கற்று இவ்வுலகை விட்டுப் பிரிந்த தமது நண்பர்களுக்கு துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றதுடன். தமது வகுப்பு நண்பன் மௌலவி அஜுமல் அவர்களால் விஷேட பயான் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. இந்த வைபவத்தில் குறித்த பிரிவு மாணவர்கள் பெரும் பாலானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Read More »

வாரண வீதியில் : திஹாரிய வாலிபர் மரணம்

01

திஹாரிய வாரண வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாரண வீதி கோரகதேனி பிரதேசத்தில் நேற்று இரவு 9:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி பாதை அருகில் இருந்த மரம் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வீரங்குல பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி திஹாரிய நியூஸ் இற்கு தெரிவித்தார். குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில் முச்சக்கர வண்டியில் நான்கு இளைஞர்கள் பயணித்துள்ளனர். அதில் திஹாரிய றாசிக் பரீத் மாவத்தையைச் சேர்ந்த ரமீஸ் நானாவின் மகன் ... Read More »

திஹாரியில் ரமழான் விசேட பயிற்சி நெறி

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் நாடளாவியரீதியில் புனித ரமலானில் திட்டமிட்டு நடாத்தப்படும் SAFTA (Spiritual Awakening For Teen Ages) எனும் தரம் 6,7,8,9 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 7 நாள் பயிற்சி நெறி இம்முறையும் திஹாரியில் அமைந்துள்ள திஹாரிய ஜம்மிய்யா காரியாலயத்தில் நடைபெற்று முடிந்தது. கடந்த 5ம் திகதி காலை 9:30 மணியளவில் சகோ. Faris, மற்றும் Imthaz அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை ஜமாத்தே இஸ்லாமி  திஹாரி உறுப்பினர்களான ஓய்வு பெற்ற அதிபர் MBM Ansar , Dr.Mansoor ... Read More »

தன்வீர் அகடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா -Photos

10338690_10152376372638159_6683806784870634295_n

சிங்கள மொழி மூல ஆலிம்களை உருவாக்கும் தன்வீர் அகடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா (2014.06.24) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வாண்டு தன்வீர் அகடமின் கல்வி கற்ற 9 பேர் ஆலிம் கற்கை நெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றனர். Read More »

திஹாரியில் இன நல்லுறவை பேணுவது தொடர்பிலான கலந்துரையாடல் – படங்கள்

DSC_0081

திஹாரியில் இன நல்லுறவை பேணுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது ஊரில் இனங்களுக்கு இடையில் சுமூகமான உறவை பேணுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது அவசர நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என இருநடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்களை வகுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது, மேலும் இன நல்லுறவு தொடர்பில் ஊரிலுள்ள அனைத்து இன மக்களையும் குறிப்பாக இளைஞ்ர்களை ஒன்று கூட்டி பாரிய பொதுக்கூட்டம் ... Read More »

திஹாரியிலும் ஹர்த்தால் ! படங்கள் இணைப்பு

07

அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு என்பன இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் திஹாரியிலும் இன்றைய தினம் மக்கள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்களில் ஈடுபாடிருப்பதை அவதானிக்க முடிகிறது. (ஸ) Read More »

Scroll To Top