News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 10)

Category Archives: திஹாரிய செய்திகள்

" இந்த இடத்தில் குப்பைகள் போடுவது தடை" நாப்பிரித்தை நுழைவாயிலில் போட்

திஹாரிய நாப்பிரித்தை (பண்டார நாயக பிளேஸ்) பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே இருக்கும் குப்பைகள் தொடர்பாக எமது இணையம் கடந்த 01-12-2012 அன்று ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பாக அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அஷ்ரப்  அவர்களது  கருத்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகள் இப்படி இருக்கையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் ” இந்த இடத்தில் குப்பைகள் போடுவது தடை” என்ற ஒரு பதாகை அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் போட்டப்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது. கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ... Read More »

ஷாபி ரஹீம் இன் நிதி ஒதுக்கீட்டில் "அஸ் சிபா லேன்" பாதைக்கு கொங்ரீட் . – படங்கள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேல்  மாகாண  சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் “அஸ் சிபா லேன்”  பாதை 5 இலட்சம் ரூபாய்கள் செலவில் கொங்ரீட் போடப்பட்டு புணர்நிர்மானம் செய்யப்பட்டுவருகிறது. இதன் வேலைகள் நேற்று காலை முதல் ஆரம்பமாகின. Read More »

திஹாரியில் கடந்த 3 நாட்களாக திருடர்களின் அட்டகாசம்.

கடந்த மூன்று தினங்களாக திஹாரியில் சில இடங்களில் திருடர்களின் அட்டகாசம் இருந்ததாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களில் பிரகாரம் ஊர்மனை, ஹாமீம் மாவத்தை, திஹாரிய சாந்தி (கண்டி வீதி) மற்றும் அம்பலத்தடி ஆகிய பிரதேசங்களில் சில வீடுகளில் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. குறிப்பாக நகைகள் மற்றும் பணம் என்பவையே திருடர்களின் பிரதான இலக்காக இருப்பதாக இதுவரை திருட்டுப்போயுள்ள வீடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்களின் படி ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே ஊர்மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். Read More »

திஹாரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் C.M.A. அமீன் அவர்களுக்கு "கலாபூஷணம் அரச விருது"

28 வது வருடமாக நடைபெற்று வரும்  கலாபூஷணம் அரச விருது வழங்கும் நிகழ்வு  15-12-2012 இன்று கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் கலாச்சார அமைச்சர்  டி.பி. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.   இன்றையா இந்த விருது வழங்கும் நிகழ்வில் திஹாரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர்  C.M.A. அமீன் அவர்களுக்கும்  “கலாபூஷணம்” அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  கிராமிய பிரதேச தேசிய கலைஞர்களை இனம் கண்டு  அவர்களுக்கு அரச விருது வருடா வருடம் கலாச்சார திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களம், ஹிந்து கலாச்சார திணைக்களமும் இணைந்து இவ் விருதினை கலைஞர்களுக்கு வருடா வருடம் வழங்கி வருகின்றது.   சிங்கள ... Read More »

குஜி ஹனீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுக் கழகங்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள்.

அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி  ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக அவர்களால் திஹாரிய விளையாட்டுக் கழகங்களுக்கு  இலவசமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று (09-12-2012) மாலை 6:30 மணியளவில் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி  ஹனீபா அவர்களின் வீட்டில் நடைபெற்றது. Read More »

அல்-அஸ்ஹர் வருடாந்த பரிசளிப்பு விழா – 2012 – படங்கள்

திஹாரிய அல்-அஸ்ஹர்  மத்திய  கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு விழா இன்று  (06-12-2012) காலை 10 மணியளவில் கண்டி வீதி லப்ஸன்  திருமண  மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஜனாப் தௌஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  இவ்வருடத்தில் மாணவர்கள் கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும்  சிறந்த பாடசாலை வரவு போன்ற பல்வேறு துறைகளில்  திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்வின் போது ,மொத்தம் 470 சான்றிதல்களும் 170 பதக்கங்களும் வழங்கப்பட்டது. அத்துடன் பரிசளிப்பு விழா நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இன்றையா இன்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேராதெனிய பல்கலைக்கழக சிரேஷ்ட  விரிவுரையாளர் M.S. அப்துல் பாரி அவர்களும் விசேட அதிதியாக  கம்பஹா மினுவாங்கொட ... Read More »

குஜி ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 10 இலட்சம் ரூபாய்கள் செலவில் பாதை புணர்நிர்மானம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேல்  மாகாண  சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் முவாஸ் லேன் பிரதேசத்தில் உள்ள கிளைப் பாதை ஒன்று 10 இலட்சம் ரூபாய்கள் செலவில் கொங்ரீட் போடப்பட்டு புணர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. Read More »

திஹாரிய ஈமானியா அரபுக் கல்லூரியிற்கு 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்தல்.

திஹாரிய ஈமானியா அரபுக் கல்லூரியிற்கு 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்ப்பதற்கான  நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09-12-2012) காலை 9 முதல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அத்துடன் புதிய மாணவர்களுக்கான பாடநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவிருகின்றது. நேர்முகப் பரீட்சைக்கு வருபவர்கள்  * பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், * 2012 பாடசாலை இறுதியாண்டு பரீட்சையின் பெறுபேறு மற்றும் வேறேதும் தகமைகள்  இருப்பின் அதற்கான சான்றிதல்களையும் எடுத்துவருமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளீர்கள். அல்-குர்ஆன் மனனம், ஷரீஆப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளுக்குமான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக ஈமானியா அரபுக் கல்லூரியின் அதிபர் N.M. சைபுல்லாஹ் அவர்கள் ... Read More »

சாபி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஹிஜ்ரா மாவத்தையில் 3 அணைக்கட்டுகள்.

555

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல்  மாகாண  சபை உறுப்பினர் சாபி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க   மேல்  மாகாண  சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை பொதுக் கிணற்றுக்கு அருகில் இருக்கும்  ஒற்றையடிப் பாதையிற்கு  553762.75 ரூபாய்கள் செலவில் மூன்று சிறிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. குறித்த  பாதையை பிற்காலத்தில் விரிவுபடுத்தி வாரண பிரதான பாதையுடன் தொடர்புபடுத்தி மக்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் முதல் கட்டமாக இப்பாதையின் அருகில் ஓடும் ஓடையையும் பாதையையும்  பிரிக்கும் சிறிய அணைக்கட்டுகள் ... Read More »

நாப்பிரித்தை குப்பை விவகாரம் – பிரதேச சபை உறுப்பினர் அஷ்ரப் பதில் .

திஹாரிய நாப்பிரித்தை (பண்டார நாயக பிளேஸ்) பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே இருக்கும் குப்பை தொடர்பாக இன்று காலை  திஹாரிய நியூஸ் இணையத்தளம் மற்றும் Alert 1st சுட்டிக்காட்டி இருந்தது. இந்த செய்தி பிரசுரமாகி சில மணித்தியாலங்களில் திஹாரிய நியூஸ் இணையத்தை தொடர்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் M.S.M. அஷ்ரப் இந்த விடையம் தொடர்பாக விளக்கமளித்தார். திஹாரிய பிரதேசத்தில் 25 குப்பை தொட்டிகளை கட்டும் தனது நடவடிக்கையின் முதல் கட்டமாக  சென்றல்  பிளேஸ் வயலருகில் ஒரு ... Read More »

Scroll To Top