News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள்

Category Archives: திஹாரிய செய்திகள்

திஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ

01

திஹாரிய கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது. குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும், லைட்டர் ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்எளிய பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு ... Read More »

தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா

1420768691311

திஹாரிக்கு புதிய அரச ஆரம்பப் பாடசாலை ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியளித்துள்ளது. அந்தவகையில், கத்தொட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 60 பேர்சஸ் காணியில் ஆரம்பப் பாடசாலைக்கான முதலாவது கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கள் நாட்டு விழா எதிர்வரும் திங்கட் கிழமை (19) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த கட்டிடம் குவைட் நாட்டின் நிதியுதவியுடன், அஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லாஹ் (நளீமி) யின் தலைமையிலான அல்-ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஆரம்பப் பாடசாலை திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் ஓர் ... Read More »

பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்

c700x420

அத்தனகல்ல பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு அணிகள் செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நிட்டம்புவ சங்கபோதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் ம. க. அணியும், கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி அணியும் மோதிக்கொண்டன. இதில் திஹாரிய அல்-அஸ்ஹர் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது இடத்தை கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணியும், மூன்றாவது இடத்தை நிட்டம்புவ சங்கபோதி அணியும் பெற்றுக்கொண்டது. அதேவேளை 18 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் ... Read More »

திஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)

IMG_0314

திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், ” திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவரும், ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஏ.சி. ஆகார் முஹம்மட், ... Read More »

திஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது

images

விலை மதிக்க முடியாத தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றை உருக்குவதற்கு தயாரான சந்தேக நபர்கள் நால்வர், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலை தொடர்ந்து திஹாரிய மின்ஹாத் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போதே குறித்த புத்தர் சிலை மற்றும் அதனை உருக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திஹாரியைச் சேர்ந்த இருவரும், உடுகொடை மற்றும் கல்-எலிய பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தங்கத்திலான புத்தர் ... Read More »

ACJU திஹாரிய கிளை புதிய உறுப்பினர்கள் தெரிவு

ACJU Thihariya Branch

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் திஹாரிய கிளை புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய உறுப்பினர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டனர். அதற்கமைய தலைவராக மௌலவி அம்ஜத் (ரஷாதி) யும், செயலாளராக மௌலவி ஸைபுல்லாஹ் (இஹ்ஸானி) யும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொருலாளராக மௌலவி பாஸி (ஹஸனி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தலைவர்களாக மௌலவி ஹஸன் பாரிஸ் (மதனி), மௌலவி தவ்ஸீர் (நளீமி) யும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப செயலாளராக மௌலவி ரமீஸ் (நளீமி) யும், உப ... Read More »

திஹாரிய, ஊர்மனை சந்தியில் சடலமொன்று மீட்பு (PHOTOS)

DSC_9416

திஹாரிய, ஊர்மனை சந்தியில் இனந்தெரியாதொருவரின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திஹாரிய, ஊர்மனை சந்தியிலுள்ள இறைச்சி கடைக்கு முன்னாள் உள்ள காணியில் இந்த சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சடலம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More »

கட்சி தாவ தயாராவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைகள் இல்லை – எம்.எஸ்.எம் அஷ்ரப்

url

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க கட்சி மாறவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் திஹாரிய நியூஸுக்குத் தெரிவித்தார். சிலர் தமது சுய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பொய்யான வதாந்திகளை பரப்பித்திரிவதாக தெரிவித்தார் அவர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு உழைப்பதாகவும் தெரிவித்தார். அதேவேலை தான் தொடர்பில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று காலை திஹாரியில் ஆரம்பம்

images

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திஹாரிய ஐக்கியம் பேணும் முஸ்லிம் அமைப்பு விழிப்புணர்வு நடவடிக்கையோன்றை முன்னெடுக்கவுள்ளது. “சமூகத்தின் எழுச்சியா? வீழ்ச்சியா? தீர்மானிக்கப்போவது உங்கள் வாக்குகள்” எனவும் தொனிப்பொருளில் அச்சிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை ஐக்கியம் பேணும் முஸ்லிம் அமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிமுதல் வீடுவீடாக சென்று விநியோகிக்கும் திட்டத்தை திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஊர்மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. – வாக்கு எமது உரிமை – ... Read More »

அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் கட்சிதாவும் அறிகுறி

url

ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் கட்சி தாவும் அறிகுறிகள் காணப்படுவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இது குறித்து திஹாரிய நியூஸ் அவரிடம் வினவியபோது; எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சில கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை கட்சி மாறுவதற்கு எந்தவித தீர்மானங்களும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப்பின் இறுதி நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் தெரியவரும் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. Read More »

Scroll To Top