News Headlines
You are here: Home » ஜனாஸா

Category Archives: ஜனாஸா

கம்பஹா வைத்தியசாலை ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்த அல் -அஸ்ஹர் மாணவன் மரணம்.

images (1)

திஹாரிய புளியமரத்தடி பிரதேசத்தில் மரத்திலிருந்து விழுந்து பலத்த காயங்களுடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவன் முஹம்மட் அஹ்சன் இன்று அதிகாலை காலமானார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டு ரம்புட்டான் மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து கிணற்று கங்ரீட் கட்டில் தலை அடிபட்டு பலத்த காயங்களுடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் முஹம்மட் அஹ்சன் அங்கிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட முஹம்மட் அஹ்சன் அங்கு ICU வில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், ... Read More »

திஹாரியை சேர்ந்த பிரபல ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் காலமானார்.

705527103Untitled-1

இலங்கையின் பழம்பெரும் சினிமா ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் (M.A. Gafoor) தனது 80 வது வயதில் இன்று காலமானார். மன்னாரை பிறப்பிடமாகவும், திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலங்கை திரைப்படத்துறையில் கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடக்கம் இன்றுவரை பல திரைப்படங்களில் பிரதான ஔிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். 2000 ஆண்டு அவர் ஒளிப்பதிவு செய்த “கினிகத் மது சமய” என்ற திரைப்படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும். (ஸ) Read More »

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் அறிவிப்பாளர் புகாரி முகம்மட் ரிஸ்னாஸ் காலமானார்.

211

புதிய காத்தான்குடி-1, டெலிகொம் வீதியில் வசித்து வந்த இளம் அறிவிப்பாளர் புகாரி முகம்மட் ரிஸ்னாஸ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.30 மணிக்கு காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலை ,மட்டக்களப்பு போதனா வைத்திசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை இவர் காலமானார். ஆரம்ப காலத்தில் காத்தான்குடியில் இயங்கி வந்த றிஸாலா வானொலியில் ... Read More »

பெண் படைப்பாளி திஹாரிய ஸீனத் ரஹ்மா காலமானார்.

Zeenath Rahma 04

. திஹாரியின் பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் ஐ. அப்துர் ரஹ்மான் (ஆங்கில ஆசிரியர்) – மர்ஹூமா உம்மு ரஹ்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்  பெண் படைப்பாளியுமான ஸீனத் ரஹ்மா காலமானார்.  . பூகொட, குமாரிமுல்ல எம்.எம்.எம். ஸக்கரிய்யா அவர்களின் அன்பு மனைவியும், திஹாரிய பாலத்தடியை சேர்ந்த பிஷ்ரி மொஹமட், ரிஸ்வி மொஹமட் ஆகியோரின் சகோதரியுமாவர்.  . அன்னாரின் ஜனாஸா நல்லகக்கம் இன்று மாலை (8th) பூகொட, குமாரிமுல்லயில் நடைபெறும்.  . சகோதரி ஸீனத் ரஹ்மா கடைசியாக எழுதிய ‘புறப்படு மகனே! புறப்படு!’ (சிறுவர் கவிதை நூல்) – ‘எதிர்காலம்’ (சிறுகதைத் தொகுப்பு) என்ற ... Read More »

ஆசாத்ஸாலியின் தாயார் காலமானார்.

asath-sali-mother

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத்ஸாலியின் தாயாரும்,அமைச்சர் A.H.M. பௌசியின் சகோதரியுமான ஹைறூன் சனூன் ஸாலி இன்று (16.4.2013) பிற்பகல் காலமானார். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.  . நோய் வாய்ப்பட்டிருந்த ஆசாத்ஸாலியின் தாயார் ஹைறூன் சனூன் ஸாலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.  . மரணிக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். இவரின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை (17.4.2013) காலையில் 8 மணியளவில் கொழும்பு குப்பியாவத்தை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read More »

திஹாரி பாலத்தடியைச் சேர்ந்த நூர் ஸனீனா காலமானார்

திஹாரி பாலத்தடியைச் சேர்ந்த Dr. M.S M மன்சூர் அவர்களின் அன்பு மனைவி நூர் ஸனீனா  காலமானார். அன்னார் மர்ஹூம் அல் ஹாஜ் தாஹா ஷரீப் தம்பதிகளின் அருமை மகளும் ஸஹ்ரியா, ஸஹ்ரான், ஸப்ரான், முனீப், முஸ்னா ஆகியோரின் தாயாரும், அநுராதபுர நாச்சியாதீவு தஸ்லீம் அவர்களின் மாமியாரும், நூர் ஸாஹினா, பரீனா ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11.30 மணி அளவில் திஹாரி  மஸ்ஜிதுல் ரவ்லா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read More »

பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் நேற்று காலமானார்

பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர்  காழி ஹூஸைன் அஹ்மத் தனது 74 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (06.01.2013) இஸ்லாமாபாத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மரணம் பொதுவாக இஸ்லாமிய உம்மத்திற்கும் குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய இயக்கத்திற்கும் ஓர் இழப்பாகும்.இஸ்லாத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான சக்திகளை துணிந்து எதிர்கொண்ட மாபெரும் ஆளுமைமிக்க ஒரு தலைவராவார். இவர் ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞரும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மறுமலா்ச்சிக்காக கடுமையாக உழைத்தவருமாவார். அன்னாரின் மரணம் குறித்து இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்  உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் ... Read More »

அல்-அஸ்ஹர் உதவி அதிபர் அப்துல் ஹலீம் ஆசிரியர் அவர்களின் தந்தை உடுகொடையில் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். உடுகொடையைச் சேர்ந்த முஹமத் முஹுசீன் அவர்கள் காலமானார். அன்னார் அல்-அஸ்ஹர் உதவி அதிபர் அப்துல் ஹலீம் ஆசிரியர் அவர்களின் தகப்பனாரும், மௌலவி நூருல் ஹம்ஸா அவர்களின் மாமனாரும், அப்துல் சமத் ஆலிம் சாயிப் அவர்களின் மைத்துனரும் ஆவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை உடுகொடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read More »

நாப்பிரித்த பிஷ்ருல் கரீமா (சித்தி தாத்தா) காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நாப்பிரித்தையச்  சேர்ந்த  பிஷ்ருல் கரீமா  (சித்தி தாத்தா) அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹூம் இக்பால் அவர்களின் அன்பு மனைவியும். பரீஸா, பசீனா, பர்வின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 12-04-2012   பிற்பகல் 2.30  மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read More »

ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த எம். எம். எம் மர்தூக் (Marzook ) காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த எம். எம். எம் மர்தூக் (Marzook )  காலமானார். அன்னார்  ரியாஸ்டீன், ரஸ்மி ஆகியோரின் தந்தை  ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று   15-02-2012 மாலை ௧௧ மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read More »

Scroll To Top