News Headlines
You are here: Home » கட்டுரைகள்

Category Archives: கட்டுரைகள்

பயங்கரவாதம் ஒழியுமா? உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

483590_494642163935123_116361964_n

“பயங்கரவாதம்” நவீன உலகைத் தொற்றியிருக்கும் பயங்கர நோய். இது ஒழிக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். எனினும், அந்த நோய் கட்டுங்கடங்காமல் பரவிக் கொண்டே செல்கிறது. அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தைப் பிரகடனம் செய்திருக்கின்றது. மேற்குலகை பயங்கரவாதத்திற்கெதிராக அணிதிரட்டியும் இருக்கிறது. உலக மக்கள் அனைவரையும் தனது அணியில் இணைக்கவும் அது முயற்சி செய்து வருகிறது “பயங்கரவாதம்” என்றால் என்ன என்பதை வரையறை செய்யாமலேயே… வரையறை செய்யாமலிருப்பதே இந்த சக்திகளுக்கு நல்லது. காரணம் தமது விருப்பம் போல் தமது தேவைக் கேற்ப தனிமனிதர்களையும் அமைப்புகளையும் நாடுகளையும் பயங்கரவாதப் ... Read More »

மே 2 ஆம் திகதி 2001 இலங்கை வாழ் முஸ்லிம்களால் மறக்க முடியாத நாள்

burning candle

மாவனல்லை மக்களால் மறக்கமுடியாத ஒரு நாளே 2001 மே 2 ஆம் திகதி மாவனல்லையில் அராஜகம் ஆட்சிபுரிந்த நாள். திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மூட்டி விடப்பட்ட இனக்கலவரத்தின் மூலம் மாவனல்லை மட்டுமின்றி முழு நாட்டு முஸ்லிம்களினதும் முதுகெலும்பை முறித்து விட சில இனவாதிகள் முயன்றனர். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட்ட இன வன்முறை முழு நாட்டையும் கலக்கி விட்டது. அத்துயர சம்பவம் நடைபெற்று இன்றைக்கு பதின்மமூன்று வருடங்கள் கடந்து விட்டன. மாவனல்லையை பொறுத்தமட்டில் 2001 இல் அந்த கலவரம் நடப்பதற்கு முன்பே சில வருடங்களாகவே ... Read More »

மத நிந்தனை வண்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்

fdf

ஒரு மதத்தையோ அதன் ஸ்தாபகரையோ நிந்தனை செய்வதும் அதன் மூலம் அந்த மதத்துடையவர்களின் உள்ளங்களைப் புண்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். அண்மையில் புத்தரையும் பௌத்த மதத்தையும் விமர்சிக்கும் வகையில் முஸ்லிம் நபர் ஒருவர் பேசியிருப்பதானது இஸ்லாமிய பண்பாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய பண்பாட்டை மீறும் செயல் மத நிந்தனை இஸ்லாமிய பண்பாட்டுக்கு எதிரானது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன. 1. “அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழை(த்து வணங்கு)பவர்களை நீங்கள் நிந்தனை செய்யவேண்டாம்… ”(6:108)என்று அல்குர்ஆன் கூறுகின்றது. 2. “உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது ... Read More »

” علم ” (இல்ம்) என்ற பதம் எந்த வகையான கல்வியை குறிக்கும்.

download

– Ash Sheikh M Z M Shafeek (UK) – மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரிக்கக்கூடாது அனைத்து வகைக் கல்வியும் சரிசமமானவையே என்ற கோஷத்துடன் Modern இஸ்லாமிய வாதிகள் இன்று களத்தில் குதித்துள்ளார்கள். குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் எங்கெல்லாம் ” علم ” (இல்ம்) என்ற வாசகம் பயன் படுத்தப் பட்டுள்ளதோ அது எல்லா வகையான அறிவையும் கலைகளையும் குறிக்கும். மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரிக்கக்கூடாது என்பதே அவர்களின் வாதம். அதே நேரம் மார்க்கக் கல்வி மட்டுமே அல்லாஹ்விடம் ... Read More »

கட்டாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் பொது பல சேனாவும்.

images

– U.H. Hyder Ali – கட்டாரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த சில இளைஞர்கள் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக எதிர்வரும் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்திருக்கிறார்கள். விடயத்தை மோப்பம் பிடித்த கட்டாரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் உளவுப்பிரிவு அதனை தடுக்கும் நோக்கில்கத்தார் போலீஸில் அந்தக் குழுவினருக்கு எதிராக புகார் செய்திருக்கிறார்கள். கட்டார் போலீஸ் அவர்களைக் கைது செய்து தீர விசாரித்ததன் பின்னர் அவர்கள் பக்க நியாயத்தை புரிந்துக் கொண்டுஅவர்களை விடுதலை செய்து விட்டதாக அறியக் கிடைத்தது. இலங்கையின் உளவுப்பிரிவுக்கு கட்டாரில் வைத்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வது கடினம்.காரணம் கட்டாடிரில் இருக்கும் நீதிச்சட்டம். எனவே அவர்கள் இவ்வாறான ஒரு முன் எடுப்பபை முன்எடுத்திருக்கிறார்கள். கட்டாரில் இருந்து சகோதரர் றிஸ்வான் தனது தாயக முஸ்லிம் உம்மாவின் நலனில் உள்ள அக்கறையுடன் தனதுசக்திக்கு ஏற்ப இவ்வாறாணன ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். நிச்சயம் அவரது இந்த முயற்சிவரவேற்கத்தக்கதுஇ போற்றத்தக்கது. சகோதரர் றிஸ்வான் ஒரு ஆர்பாட்டப் பேரனி ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாகத்தான் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  அரபு நாடுகளில் இருந்து எமக்கு கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்களை மேற் கொள்வது கடினம். இருந்தாழும் நாம் அங்கிருந்து எவ்வாறான முயற்சிகளை மேற் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு செயற்படுத்துங்கள். ஆனால் இந்த சகோதரர் இவ்வாறான முயற்சியில் இறங்கியதும் அதனை கட்டாரில் உள்ள இலங்கை ஜமாத் ஈஇஸ்லாமி மற்றும் ஸ்ரீலங்கா தஃவா மத்திய நிலையம் போன்றவைகள் வழமை போல் இதனை விமர்சிக்கத்தொடங்கிவிட்டனா.; வேகத்தை விட விவேகம் வலுவானது என்கின்ற இந்த வசனத்தை பாவித்தே இலங்கையில் உள்ள ஜம்மியதுல்உலமாவும்இ  ஜமாத் ஈ இஸ்லாமியும் கடந்த காலங்களில் இலங்கை வாழ் இளைஞர்களது உணர்வுகளை மதிக்காமல்அடக்கி ஒடுக்கி அவர்களது சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பெறுமதி இல்லாமல்ஆக்கிவிட்டார்கள். கடினம். இருந்தாழும் நாம் அங்கிருந்து எவ்வாறான முயற்சிகளை மேற் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு செயற்படுத்துங்கள் இங்கும் கட்டாரில் இருந்து இந்த முயற்சியை மேற்கொள்ளும் சகோதரர் றிஸ்வான்  அவர்ளது செயற்பாடுகளையும்அடக்க முயற்சிக்கும் சகோர்கள் தயவு செய்து அவரை விமர்சிக்காது இந்த முயற்சிக்கு உங்களது வழிகாட்டல்களைவழங்கி அவரை நெரிப்படுத்துவதற்காக முயற்சியுங்கள். அவரிடமுள்ள திறமைகளை சமுகத்தின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு உதவுங்கள். பொதுவாக கட்டாரில் உள்ள ஜமாத ஈ இஸ்லாமி, உறுப்பினர்கள் தங்களைத்தவிர ஏனையவர்கள் சமூக நலச்செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று எண்ணுவது மிகவும் ஒரு கீழ் தரமான செயலாகும். தயவு செய்து இவ்வாறானசெயற்பாடுகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றினைத்து அனைவருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கி இந்தசெய்படுகளில் எமது ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள். ... Read More »

பல்வகை சோதனைகளும் அதன் பயன்களும்

download

– A.J.M மக்தூம் – இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் நிம்மதி, சந்தோசம், பிரச்சினைகள், சிக்கல்கள் என எந்நிலையில் வாழ்ந்தாலும் அனைவரும் அவரவருக்கென இறைவன் விதித்தபடி சோதிக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே ஏழ்மை, கஷ்டம் மற்றும் நோயில் வாழ்கிற ஒருவரும் செல்வ செளிப்புடன் ஆரோக்கியமாக வாழும் ஒருவரும் முறையே சோதிக்கப்பட்டுக் ... Read More »

நமது வாக்குரிமைகளை பயன்படுத்திட முன் நலவை நாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்

download

–  A.J.M மக்தூம் – நாம் அளித்திடும் வாக்குகள் மூலமே முழு சமூகத்தின் மீதான அதிகாரத்தையும் ஒருவரிடமோ, பலரிடமோ ஒப்படைக்கப் படுகிறது. ஆகவே நமக்குள்ள வாக்குரிமை என்பது பெரியதோர் அமானிதமாக இருக்கிறது. வேட்பாளர்கள் நாளை அதிகாரிகளாக வந்து அரங்கேற்றும் அனைத்து அடாவடித் தனங்களுக்கும் நாமும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் அனைத்திலும் நமக்கும் பங்குள்ளது என்பதை புரிந்து கொண்டே ஒருவரை ஆதரிக்கவோ, வெறுக்கவோ வேண்டும். நாம் தெரிந்துக் கொண்டே தகுதியற்ற ஒருவரை ஆதரிக்கும் பொழுது அவர்களின் நாசகார செயல்கள் குறித்தும், அவர்கள் சமூகத்துக்கு இழைக்கும் அநீதிகள் குறித்தும் நாளை ... Read More »

இறை மதமும் இழிவாகும் தேசமும் …!!

images

– Zuhair Ali (Ghafoori-UoC) – சமயம் அல்லது மதம் – மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை “அனைவரும் ஒன்றே” என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டவே உருவாக்கப்பட்டதாகும். இறையியல் (Theology) என்னும் சொல் இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில்சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு எனவும் அதை விளக்கலாம்.இஸ்லாமிய மரபில் ... Read More »

உரிஞ்சப் படும் ஆபிரிக்காவும் மூன்றாம் உலக நாடுகளும்

download (2)

Ash Sheikh M Z M Shafeek (UK) மத்திய, கிழக்கு, மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளில் நாளுக்கு நாள் வறுமை தலை விரித்தாடிக் கொண்டிருப்பதை அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகிறோம். சில போது வறுமையின் கோரத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் சில கானொளிகளை (Video Clips) பார்த்து விட்டு உணர்ச்சி வசப் படவும் கண்ணீர் சிந்தவும் செய்கின்றோம். ஆனால் துரதிஷ்ட வசமாக எம்மில் பலருக்கு அந் நாடுகளின் வறுமைக்கான உண்மைக் காரணம் யாது என்பது இன்று வரை தெரிய வில்லை. அந் நாடுகள் ... Read More »

உலக ஆசையும், அதிகார மோகமும்

download (1)

– A.J.M.மக்தூம் – பதவி மோகம், புகழாசை, பேராசை, பெருமை ஆகிய தீய பண்புகளே இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் போன்ற வற்றுக்கு மூல காரணியாக விளங்குகின்றன என்ற உண்மையை நம்மில் பலரும் உணர்ந்து கொள்ளாமல் இருந்த போதிலும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி எமக்கு உணர்வூட்டி விட்டு சென்றுள்ளார்கள். ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் நாசத்தையும், அழிவையும் விட பாரிய குழப்பத்தை ஒரு மனிதனுடைய உலக ஆசையும், ... Read More »

Scroll To Top