News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள்

Category Archives: உள்நாட்டுச் செய்திகள்

இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…

vector-prophet-muhammad-pbuh6247

காதியானிஸம் அல்லது அஹமதிஸம் எனப்படும் கொள்கைக்கு எதிரான மாபெரும் மாநாடொன்று எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. “இறுதி நபித்துவப் பாதுகாப்பு மாநாடு” எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றவுள்ள இந்த மாநாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “இறுதி நபித்துவத்திற்கு சவாலாக இருக்கும் காதியானிகள் எனும் ... Read More »

ரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் !

Sakaulla UPFA

காலஞ்­சென்ற மேல் மாகாண சபை உறுப்­பினர் ரஞ்சித் ரூப­சிங்­கவின் இடத்­திற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்டு விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் அடுத்த நிலையில் உள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு நடை­பெற்­ற மேல் மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யிட்டு 21 ஆயி­ரத்து 579 விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். தற்­போது நீர்­கொ­ழும்பு மாந­கர சபையின் பிரதி மேய­ரா­க­வுள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ், மேல் மாகாண சபைக்கு தெரி­வா­வதன் மூலம் கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதத்­திரக் கட்சி சார்­பாக மேல் மாகாண ... Read More »

கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம் திகதி

download (2)

கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா இம்மாதம் 29ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் பாடலாசிரியர் எஹலியகொட விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். பிரதேச செயலகம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் ஆகிய இணைந்து இச்சாஹித்தய விழாவை ஏற்பாடு செய்துள்ளன. Read More »

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை

download (1)

ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சிறுவர் தினம் நிமித்தம் அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் பாத யாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா பிரதே செயலகம், பொலிஸ் என்பன இவ்விசேட பாதயாத்திரையை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவருக்கு நட்புறவான சூழல், உலகை போன்றும் கரங்கள் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பாதயாத்திரை ஒக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணிக்கு கம்பஹா போதி ஶ்ரீ வீதிக்கு அருகாமையில் ஆரம்பமாகி கம்பஹா ரயில் நிலையம் வரையில் செல்லவுள்ளது. பாடசாலை மாணவர்கள், தொண்டு அமைப்புக்கள், அரச நிறுவன அதிகாரிகள் ... Read More »

மஹிந்த சற்று முன்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

Sri-Lankas-president-Mahi-006

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். தான் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். பொது மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று அதிகாலை பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டதன் பிறகே அவர் இம்முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.(ரி) Read More »

வாக்குப் பதிவுக்கு விசேட பேனாவை மாத்திரம் பயன்படுத்துக்கள்

Screen Shot 2015-01-07 at 10.30.20 AM

தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட பேனாவினால் மாத்திரமே வாக்குச் சீட்டில் புள்ளடியிட முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மது தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச் சீட்டுக்கு புள்ளடி இட வைக்கப்பட்டுள்ள பென்சில்களின் எழுத்து சில மணி நேரத்தில் அழிந்து செல்லும் தன்மை கொண்டவை, பென்சில்களினால் அல்லது பேனாவினால் புள்ளடியிடப்பட்டால் வாக்குகள் நிராகரிக்கப்படும் இதனால், தேர்தல் முடிவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது போன்ற செய்திகள் பல்வேறு தரப்பிலும் பரவியுள்ளமை குறித்து பிரதித் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ... Read More »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஞான் உம்மா மஹிந்தவுக்கு ஆதரவு

Screen Shot 2015-01-04 at 11.06.25 AM

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஞான் உம்மா முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் பழுத்த முதிர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. இந்த நாட்டின் வரலாற்றில் உருவான ஜனாதிபதிகளில் மிகவும் ஜனரஞ்சகமானவர். அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர். சொல்வதைச் செய்பவர். கடந்த 30 வருட காலமாக இந்த நாட்டில் முடிவு காணப்படாமல் இருந்து வந்த கொடூர யுத்தத்தை துணிந்து செயற்பட்டு ... Read More »

வயிற்று வலியால் சிறுவன் மரணம்; குடற்புழுக்கள் மீட்பு – சம்மாந்துறை சம்பவம்

tapwarm

வயிற்றுவலி காரணமாக நேற்று (24) திங்கட்கிழமை சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஒருவரின் வயிற்றிலிருந்து பெருந் தொகையான குடற்புழுக்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான மஹாநாம திஸாநாயக்க தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் பின்னரே இந்த நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள்ளிருந்து அகற்றப்பட்டன. சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி பல சாதனைகளை நிகழ்த்திய வைத்திய நிபுணர் ஏ.எச்.சமீம் சிங்கபூர் ... Read More »

கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு

download

2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்களின் படி கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16,37,53,058 ஆகும். அவ்வாறே ஆகக்குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம் வன்னியாகும் வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,53,058. 2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,50,44490 ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ... Read More »

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாடு – Photos

IMG_4075

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62வது வருடாந்த தேசிய மாநாடு இன்று காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை சாய்ந்தமருது லீ மரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் தலைமையில் நடைபெற்ற வருடாந்த தேசிய மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பகுதிகள் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்தோடு, அங்கத்தவர்களைத் தகைமைப்படுத்தும் நிகழ்ச்சி, ஆளுமை விருத்தி நிகழ்ச்சி, அமீர் தெரிவு, மஜ்லிஸுஷ் ஷூரா தெரிவு, பிராந்திய நாஸிம்கள் தெரிவு, பிரமுகர் ... Read More »

Scroll To Top