News Headlines
You are here: Home » அயலூர் (page 3)

Category Archives: அயலூர்

கஹடோவிட முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் மற்றும் ஒரு சமூக சேவைப் பணி.

IMG_0029

வதுபிடுவள போதனா வைத்தியசாலை ஊழியர்களின் கிரிக்கெட் அணியிற்கு சீருடைகளை வழங்கும் வைபவம் கடந்த 13ஆம் திகதி வதுபிடுவள BIO மைதானத்தில் நடைபெற்றது.இந்த சீருடைகளை வதுபிடுவள வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr. சிசிர மற்றும் ஊழியர்களின் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜனித் ஆகியோர் அமான வங்கியின் ஆலோசகர் அஷ் சேய்க் M.H.M அஸ்லம் அவர்களிடமிருந்து பெற்றுகொண்டனர்  இதேவேளை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்னமாலி அவர்களின் நிதி ஓதிக்கீட்டின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்னமாலி அவர்களின் ஊடகச் செயலாளர் ... Read More »

யக்கல பகுதி விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது

protest-001

யக்கல பிரதேச வீடொன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை கம்பஹா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். குறித்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்ட போது மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 21, 23, 42 வயதுகளையுடைய குருநாகல், வலவிவத்த, சாதிக்காவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று (07) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். Read More »

கலகெடிஹேன வேன் முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் பலி.

accident_23

கலகெடிஹேன  பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் பலியானதுடன் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திஹாரி, கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், கொழும்பு மாளிகாவத்தையைச்சேர்ந்த ஹைரியத்துல்லா சூரியா (வயது 62), பாத்திமா ரவூபியா (வயது 48), பாத்திமா நுஷ்ரா( ஒன்றரை வயது) மற்றும் கத்தோலிக்க பாதிரியாரான லேனாட் ரணசிங்க( வயது -60 ஆகியோரே பலியாகியுள்ளனர். இவ்விபத்தில் உயிரிழந்த நபர்களின் சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுகும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ... Read More »

திஹாரி மண்ணின் புதல்வி ஸீனத் ரஹ்மா ஸக்கரிய்யாவின் நூல் வெளியீட்டு விழா-Photos

Zeenath Rahma 01

திஹாரியின் பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் ஐ. அப்துர் ரஹ்மான் (ஆங்கில ஆசிரியர்) – மர்ஹூமா உம்மு ரஹ்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி ஸீனத் ரஹ்மாவின் ‘புறப்படு மகனே! புறப்படு!’ (சிறுவர் கவிதை நூல்) – ‘எதிர்காலம்’ (சிறுகதைத் தொகுப்பு) என்ற இரு நூல்கள் இணைந்த ‘2 in 1’ நூலின் வெளியீட்டு விழா பூகொட – குமாரிமுல்ல முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிறு (07 ஏப்ரல் 2013) மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமானது. பூகொட-குமாரிமுல்ல அந்நூர் அஹதியா பாடசாலை இந்த வைபவத்தை ... Read More »

பெண் படைப்பாளி திஹாரிய ஸீனத் ரஹ்மாவின் ‘புறப்படு மகனே! புறப்படு! ” சிறுகதைத் தொகுப்பு.

ZEENATH FOTO copy

பெண் படைப்பாளி ஸீனத் ரஹ்மா எழுதிய ‘புறப்படு மகனே! புறப்படு! ” என்ற தலைப்பிலான நூல் வெளியீடு விழா எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூகொட குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் பி.ப. 3 மணிக்கு நடைபெறவுள்ளது.  . நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம். ஏ. கபூர் தலைமையில் நடைபெறவுள்ள இன் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி சேவை பணிப்பாளர் புலவர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். . அத்துடன் இந்நூலின் விமர்சனத்தை பிரதித் தேர்தகள் ஆணையாளர்  அல்ஹாஜ் எம்.எம். முஹம்மத் ... Read More »

மரம் விழுந்ததால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை. Photos

Yakka Mahavita 01

இன்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழை காரணமாக கொழும்பு கண்டி பிரதான வீதியில் யக்கல மகவிட பிரதேசத்தில்  மரங்கள் முறிந்து பாதையில்  விழுந்ததால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து.  இதனால் குறித்த நேரத்தில் அந்த இடத்தால் சென்ற கார், முச்சக்கரவண்டி, பஸ் அடங்கலாக சில வாகனங்கள் சேதத்துக்குள்ளாகியது. அத்துடன் மகவிடயில் இருந்த டிரான்ஸ்போமர்  முற்று முழுதாக செயலிழந்தது. இதனால் பெலும்மகர, யக்கல. கலகேடிஹென மற்றும் திஹாரிய பிரதேசங்களில் சுமார் 3 மணித்தியாலங்களிற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது. Read More »

சரண குணவர்தனவுக்கு அத்தனகல நீதவான் பிடியாணை.

பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு அத்தனகல நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது. நிட்டம்புவ, ஹொரகொல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற  வீட்டுத்தொகுதியின் மீது தாக்குதல் நடத்தினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் பிரதிவாதியான பிரதியமைச்சர் சரண குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜராகாததையடுத்தே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிடியாணையை அத்தனகல பிரதி பொலிஸ் மா அதிபரினூடாக செயற்படுத்துமாறு அத்தனகல நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ருவான் சிசிர உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான அத்தனகல பிரதேச சபையின் ... Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஹடோவிட, ஓகொடபொலயில் மக்களுக்கு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு – படங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கஹடோவிட, ஓகொட பிரதேசங்களில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு இன்று பகல் வேலைக்கான சமைத்த உணவுகளை வழங்க அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் M .H .M . அஷ்ரப் ஏற்பாடு செய்துள்ளார்.    நேற்று இரவு முதல் பேய்ந்த கடுமையான மழை காரணமாக கஹடோவிட, ஓகொட பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக கஹடோவிட Oxford சர்வதேச பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன். இரு பிரதேசங்களிலும் வீடுகள் பல பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் வெள்ளம் அதிகரித்துவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.      Read More »

கஹடோவிட மற்றும் ஓகொடபொலயில் வெள்ளம் – படங்கள்.

நேற்று இரவுமுதல் பெய்துவரும் கடும் மழை காணரமாக கஹடோவிட வான மற்றும் ஓகொடபொல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பிரதேசங்களில் போக்குவரத்து முற்றாக சீர்குலைந்துள்ளதுடன், வீடு, கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது.     Read More »

நாம்புளுவையில் வெள்ளம். கடை, வீடுகள் பாதிப்பு…

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாம்புளுவையில் வெள்ள நிலைமை காணப்படுகிறது.   நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நம்புளுவா பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் பிரதான வீதியிற்கு அருகாமயில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.     Read More »

Scroll To Top