News Headlines
You are here: Home » அயலூர் (page 2)

Category Archives: அயலூர்

மல்வானையிலும் ஹர்த்தால் – Photos

10366015_543740865734559_8934721294942439325_n

பேருவளை, அளுத்கம, தர்கா நகரில் பொது பல சேனாவினால் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்டித்து இன்று மல்வானை நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. – மல்வானை நியூஸ் –   Read More »

நிலவும் சீரற்ற காலநிலை – கஹடோவிடயில் வெள்ளம் – படங்கள்

KKAHT 03

– சுஹைல் | சஹீட் – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்த சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை  தொடரும் இந்த சீரற்ற காலநிலை காரணமாக எமது திஹாரியின் அயலூரான கஹடோவிட பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 185 இலக்க நிட்டம்புவ – கிரிந்துவேல பாதை உட்பட சில பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் குறித்த பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்  எமது ... Read More »

ரம்புட்டான் தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம் – கம்பஹாவில் சம்பவம்

download

ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவர். கம்பஹ இஹல யாகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஹிருச நெதுதுல் என்ற சிறுவனாகும். வீட்டிலிருந்த சிறுவனுக்கு அவனுடைய சகோதரர் றம்புட்டானை தோல் நீக்கி கொடுத்திருக்கிறார். இவன் அதனை உட்கொண்ட பொழுதே தொண்டையில் சிக்கி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த பின் சிறுவன் உயிரிழந்தான். – தினகரன் – Read More »

எச்சரிக்கை! அத்தனகலு ஓயாவை பயன்படுத்த வேண்டாம்.

images (1)

கம்பஹா அத்தனகல ஓயாவின் அஸ்கிரிய பிரதேசத்தில் மீன்கள் உயிரிழந்தமையை கண்டறிவதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் டி.டபிள்யூ பிரதாபசிங்க தெரிவிக்கின்றார். அத்தனகலு ஓயாவின் நீர் மாதிரி குறித்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார். மீண்டும் அறிவிக்கப்படும் வரை அத்தனகலு ஓயாவை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக கம்பஹா பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடுகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் ... Read More »

கம்பஹா பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத 55000kg பழங்கள் மீட்ப்பு

url

கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் களஞ்சியம் ஒன்றிலிருந்து 55 ஆயிரம் கிலோகிராம் பாவனைக்கு உதவாத பழங்கள் மீட்கப்பட்டுள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்ட குறித்த பழங்களின் பெறுமதி 250 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புச் சந்தைகளில் இருந்து அகற்றப்பட்ட பழங்கள் மீள பொதியிடப்பட்டு புறக்கோட்டை அரச மரத்தடியில் உள்ள நடமாடும் வர்த்தகர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார் படுத்தப்பட்டிருந்தது. இந்த தருணத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாவனைக்கு உதவாக பழங்கள் கைப்பற்றப்பட்ட இடத்தில் ... Read More »

இரு பஸ்கள் மோதி விபத்து: 1வர் பலி, 62 பேர் படுகாயம் (Photos)

1497539_474268506012129_1834331358_n copy

நிட்டம்புவ மற்றும் பஸ்யாலவிற்கு இடையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்  1வர் பலி, 62 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் அறிவித்துள்ளது. Read More »

கம்பஹாவில் இன ஐக்கியத்தை வலியுறுத்திய இப்தார்!

ifthar_200_150-1

இனங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தையும் நல்லெண்ணத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் கம்பஹா ஒருத்தொடயில்  நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 13 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் சகல இன மக்களும் கலந்துக் கொண்டனர். Read More »

திருமண வைபவத்தில் மூக்கை கடித்த ஐதேக உறுப்பினர் – அத்தனகல்லயில் சம்பவம்

download

அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண தொகுதி அமைப்பாளர் ஒருவர் அங்கிருந்த நபர் ஒருவரது மூக்கை கடித்து தாக்கியுள்ளார்.   . ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண தொகுதி அமைப்பாளர் துஷார ஹேமச்சந்திரவின் தாக்குதலில் காயமடைந்தவர் ஒரு ஊடக நிறுவன ஊழியர் எனவும் பாதிக்கப்பட்ட நபர் தற்பொழுது வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  . இதற்கு முன்னதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த வர்த்தகர் ஒருவரின் மூக்கை கடித்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. Read More »

வரக்காபொலையில் நடைபெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய இறுவெட்டுக் கண்காட்சி

images

எதிர்கால சந்ததியினரின் கரங்களில் தவழும் மோசமான பயனற்ற இறுவெட்டுக்களின் பயன்பாட்டிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் நோக்கில் வரக்காபொலை கலை இலக்கிய வட்டமும் YMEA அமைப்பும் இணைந்து மாபெரும் இஸ்லாமிய இறுவெட்டுக் கண்காட்சியொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 14 ஆம் 15 ஆந் திகதிகளில் இக்கண்காட்சி வரக்காபொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியில் நடைபெறும். ஆயிரம் வகைகளுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இறுவெட்டுக்கள் காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் பல இஸ்லாமிய நிறுவனங்களின் காட்சிக் கூடங்களும் அங்கு ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரு தினங்களிலும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 ... Read More »

கோலா இளைஞர் கழகத்தின் “வெற்றி” விருது வழங்கும் விழா -2013 – Photos

01

நாம்புளுவ,பஸ்யால கோலா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “வெற்றி”  விருது வழங்கும் விழா நேற்று மாலை நாம்புளுவ பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. .  2011/2012  கம்பஹா மாவட்டதின் முஸ்லிம் பாடசாலைகளில் கல்விகற்று சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளில் சிறப்பு சித்தியடைந்த மாணவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டது. . இந்த விழாவிற்கு  பிரதம அதிதியாக ,கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கெளரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல்  மாகாண  சபை உறுப்பினர் சாபி ரஹீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். Read More »

Scroll To Top