News Headlines
You are here: Home » அயலூர்

Category Archives: அயலூர்

கோலா “சுப்பர் வோய்சஸ்” பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி

03

ஜம்மியதுஷ் சபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன், நாம்புளுவை கோலா கழகம் நடாத்தும் “சுப்பர் வோய்சஸ்” சிறந்த குரலாற்றல் மிக்க மாணவர்களை இனம்காணும் நிகழ்ச்சி அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமப்புற பாடசாலை மாணவர்களின் திறமைகளை நாடளாவிய ரீதியில் வெளிக்காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம், 11ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் கம்பஹா, மினுவாங்கொட, களனி மற்றும் நீர்கொழும்பு வலயங்களுக்கிடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தகது. Read More »

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்

images (1)

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்கும், பிரச்சாரக்கூட்டம் ஒன்று இன்று கஹடோவிட சந்தியில் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க, ஹிருனிகா பிரேமசந்திர, சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்பட்டுக் குழு அறிவித்துள்ளது. Read More »

கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு

download

2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்களின் படி கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16,37,53,058 ஆகும். அவ்வாறே ஆகக்குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம் வன்னியாகும் வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,53,058. 2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,50,44490 ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ... Read More »

இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

01

அத்தனகல்லைப் பிரதேச சபையின் குப்பை கூளங்களினால் பிரதேச சூழல் மாசடைவதாக தெரிவித்து கஹட்டோவில் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கஹட்டோவிட்ட ஹிஜ்ரா மாவத்தை மற்றும் மாளிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் ஊர்வாரியாக சேகரிக்கப்படுகின்ற கூளங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இப்பிரதேசத்தில் பாரியளவில் நீர் மாசடைவதாகவும், நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பல முறை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாததனால் எழுந்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ... Read More »

மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு வந்த பிக்குகளால் பதற்றம்

IMG-20141004-WA0015

மாவனல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கு இன்று பிக்குகள் திடீரென சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் குர்பான் இற்கு மாடு பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, மல்வானை உலஹிடிவேல பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு சென்ற பிக்குகள், அநாதை நிலையத்தை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கு பதற்றநிலை நிலவி வருவதாகவும் அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 20 பிக்குமார் இன்று மாலை மாக்கோலை முஸ்லிம் அநாதை ... Read More »

நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ் கொள்ளை முயற்சி முறியடிப்பு

download

நிட்டம்புவையில் இடம்பெறவிருந்த கொள்ளை முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ்சை கொள்ளையிடச் சென்ற ஆயுதமேந்தியவர்களே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். முழு முக தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் 6 பேர் நேற்று மாலை குறித்த தங்க நகைக் கடைக்குள் புகுந்தபோது.கடையின் பணியாளர்கள் மற்றும் ஏனைய மூவர் இவர்களைப் பிடித்துள்ளனர். எனினும் எஞ்சிய மூவர் தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர்களையும் கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னைடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Read More »

“தமிழ் நாய்களே வெளியே செல்லுங்கள்” யாழ் அணிமீது கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதல்

tnfav - Copy

தேசிய இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய கிரிக்கெட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற கம்பஹா வருகைதந்த யாழ்ப்பாணத்து அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்றிருந்த காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் அணி அம்பாந்தோட்டை அணியினை வெற்றி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து கம்பஹா அணியுடன் அரையிறுதி போட்டி ஆரம்பமாகியிருந்த நிலையில் யாழ்ப்பாண அணி வெற்றிபெறுமென்ற அச்சத்தில் போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த வீரர்கள் மீதே வெளியிலிருந்து கற்கள் மற்றும் கழிவு பொருட்கள் ... Read More »

பிரதம பொலிஸ் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சாரதி – நிட்டம்புவ பிரதேசத்தில் சம்பவம்

images (1)

பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கன்னத்தில் அறைந்த பஸ் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிர்வாகப் பிரிவு பிரதம பொலிஸ் பரிசோதகர் எல்.ஆர். விதாரண மீது, தனியார் பஸ் சாரதியொருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி சிவில் உடையில் நிட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் வாகனமொன்றில் பயணித்த பொலிஸ் அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ் சாரதி வாகனத்தைச் செலுத்துவதனை ... Read More »

40,000 கிலோ கழிவு தேயிலை கம்பஹாவில் மீட்பு

images

சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்து 1கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் நோக்கில், கம்பஹா நெதும்கமுவ களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் கொள்வனவு செய்த கழிவு தேயிலையை 20 கிலோ கிராம் பெட்டிகளில் பொதியிட்டு, இலங்கை தேயிலை என அவற்றின் மீது குறியீடு இட்டு விற்பனை செய்ய முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ... Read More »

எமது கிராம இளைஞர்களின் நிதானம் அசம்பாவிதத்தைத் தடுத்தது – கஹட்டோவிட்ட பிரதேச மக்கள்

arrest-records

கம்பஹா மாவட்ட, கஹட்டோவிட்ட கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் போது, அப்பிரதேச முஸ்லிம்கள் நிதானமாக செயற்பட்டதனால், இனவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது, நேற்று மாலை 5.00 மணியளவில் கஹட்டோவிட்டாவிலுள்ள கையடக்கத் தொலைபேசி திருத்தும் கடையொன்றுக்கு அயல் கிராமத்தைச் சேர்ந்த இரு பெரும்பான்மை சகோதரர்கள் பிரவேசித்துள்ளனர். தொடர்பற்ற முறையில் இனத்துவேஷத்தைக் கக்கக் கூடியவாறு வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர். பின்னர், வீதி வழியே முஸ்லிம்களை ஆத்திரமூட்டக் கூடிய முறையில் வார்த்தைகளை பிரயோகித்தவாறு சன நடமாட்டமுள்ள இடங்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். ... Read More »

Scroll To Top