News Headlines
You are here: Home » Author Archives: admin

Author Archives: admin

திஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ

01

திஹாரிய கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது. குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும், லைட்டர் ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்எளிய பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு ... Read More »

தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா

1420768691311

திஹாரிக்கு புதிய அரச ஆரம்பப் பாடசாலை ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியளித்துள்ளது. அந்தவகையில், கத்தொட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 60 பேர்சஸ் காணியில் ஆரம்பப் பாடசாலைக்கான முதலாவது கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கள் நாட்டு விழா எதிர்வரும் திங்கட் கிழமை (19) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த கட்டிடம் குவைட் நாட்டின் நிதியுதவியுடன், அஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லாஹ் (நளீமி) யின் தலைமையிலான அல்-ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த ஆரம்பப் பாடசாலை திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் ஓர் ... Read More »

பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்

c700x420

அத்தனகல்ல பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு அணிகள் செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நிட்டம்புவ சங்கபோதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் ம. க. அணியும், கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி அணியும் மோதிக்கொண்டன. இதில் திஹாரிய அல்-அஸ்ஹர் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது இடத்தை கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணியும், மூன்றாவது இடத்தை நிட்டம்புவ சங்கபோதி அணியும் பெற்றுக்கொண்டது. அதேவேளை 18 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் ... Read More »

திஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)

IMG_0314

திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், ” திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவரும், ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஏ.சி. ஆகார் முஹம்மட், ... Read More »

திஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது

images

விலை மதிக்க முடியாத தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றை உருக்குவதற்கு தயாரான சந்தேக நபர்கள் நால்வர், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலை தொடர்ந்து திஹாரிய மின்ஹாத் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போதே குறித்த புத்தர் சிலை மற்றும் அதனை உருக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திஹாரியைச் சேர்ந்த இருவரும், உடுகொடை மற்றும் கல்-எலிய பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தங்கத்திலான புத்தர் ... Read More »

இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…

vector-prophet-muhammad-pbuh6247

காதியானிஸம் அல்லது அஹமதிஸம் எனப்படும் கொள்கைக்கு எதிரான மாபெரும் மாநாடொன்று எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. “இறுதி நபித்துவப் பாதுகாப்பு மாநாடு” எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றவுள்ள இந்த மாநாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “இறுதி நபித்துவத்திற்கு சவாலாக இருக்கும் காதியானிகள் எனும் ... Read More »

ACJU திஹாரிய கிளை புதிய உறுப்பினர்கள் தெரிவு

ACJU Thihariya Branch

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் திஹாரிய கிளை புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய உறுப்பினர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டனர். அதற்கமைய தலைவராக மௌலவி அம்ஜத் (ரஷாதி) யும், செயலாளராக மௌலவி ஸைபுல்லாஹ் (இஹ்ஸானி) யும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொருலாளராக மௌலவி பாஸி (ஹஸனி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தலைவர்களாக மௌலவி ஹஸன் பாரிஸ் (மதனி), மௌலவி தவ்ஸீர் (நளீமி) யும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப செயலாளராக மௌலவி ரமீஸ் (நளீமி) யும், உப ... Read More »

ரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் !

Sakaulla UPFA

காலஞ்­சென்ற மேல் மாகாண சபை உறுப்­பினர் ரஞ்சித் ரூப­சிங்­கவின் இடத்­திற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்டு விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் அடுத்த நிலையில் உள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு நடை­பெற்­ற மேல் மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யிட்டு 21 ஆயி­ரத்து 579 விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். தற்­போது நீர்­கொ­ழும்பு மாந­கர சபையின் பிரதி மேய­ரா­க­வுள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ், மேல் மாகாண சபைக்கு தெரி­வா­வதன் மூலம் கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதத்­திரக் கட்சி சார்­பாக மேல் மாகாண ... Read More »

கோலா “சுப்பர் வோய்சஸ்” பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி

03

ஜம்மியதுஷ் சபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன், நாம்புளுவை கோலா கழகம் நடாத்தும் “சுப்பர் வோய்சஸ்” சிறந்த குரலாற்றல் மிக்க மாணவர்களை இனம்காணும் நிகழ்ச்சி அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமப்புற பாடசாலை மாணவர்களின் திறமைகளை நாடளாவிய ரீதியில் வெளிக்காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம், 11ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் கம்பஹா, மினுவாங்கொட, களனி மற்றும் நீர்கொழும்பு வலயங்களுக்கிடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தகது. Read More »

கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம் திகதி

download (2)

கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா இம்மாதம் 29ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் பாடலாசிரியர் எஹலியகொட விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். பிரதேச செயலகம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் ஆகிய இணைந்து இச்சாஹித்தய விழாவை ஏற்பாடு செய்துள்ளன. Read More »

Scroll To Top