News Headlines
You are here: Home » அயலூர் » 40,000 கிலோ கழிவு தேயிலை கம்பஹாவில் மீட்பு

40,000 கிலோ கழிவு தேயிலை கம்பஹாவில் மீட்பு


சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்து 1கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் நோக்கில், கம்பஹா நெதும்கமுவ களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் கொள்வனவு செய்த கழிவு தேயிலையை 20 கிலோ கிராம் பெட்டிகளில் பொதியிட்டு, இலங்கை தேயிலை என அவற்றின் மீது குறியீடு இட்டு விற்பனை செய்ய முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

– தமிழ் மிரர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top