News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » 36 பந்துகளில் 100 ஓட்டங்கள் : அன்டர்சன் புதிய சாதனை

36 பந்துகளில் 100 ஓட்டங்கள் : அன்டர்சன் புதிய சாதனை


நியுஸிலாந்து அணியின் கோரி அன்டர்சன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிவேக சதத்தைப் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்  போட்டியில் என்டர்சன், 36 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனையை படைத்துள்ளார்.

21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியியில், அன்டர்சன் 14 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்களாக 47 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் சயிட் அப்ரிடி கடந்த 17 வருடங்களாக தக்க வைத்திருந்த ”சர்வதேச ஒருநாள்  போட்டியின் அதிவேக சதம்” என்ற சாதனையை கோரி அன்டர்சன் முறியடித்தார்.

1996 ஆம் ஆண்டு அப்ரிடி 37 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top