News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » 3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்

3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்


தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அல் ஜசீரா தொலைக்காட்சியின் 3 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையை எகிப்து நீதிமன்றம் விதித்துள்ளது.

முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தீவிரவாத இயக்கமாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான விடியோ படங்களை சேகரித்து அதில் பொய்யாக காட்சிகளை சித்திரித்து, செய்திகள் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அல் ஜசீரா செய்தியாளர்கள் 3 பேர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். எகிப்து நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டும், வெடி மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கெர்ரி கண்டனம்: இதனிடையே, அல் ஜசீரா செய்தியாளர்கள் 3 பேருக்கு எகிப்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்திருப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top