News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » வட்டரக்க விஜித்த தேரருக்கு மஹியங்கனையில் பாரிய எதிர்ப்பு.

வட்டரக்க விஜித்த தேரருக்கு மஹியங்கனையில் பாரிய எதிர்ப்பு.


மஹியங்கனை பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த அப்பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான வட்டரக்க விஜித்த தேரருக்கு எதிராக இன்று மஹியங்கனை பிரதேச முன்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மஹியங்கனை பிரதேச சபை அமர்வு இன்று காலை இடம்பெறவிருந்த நிலையில் அதன் வளாகத்தில் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது இந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர், மஹியங்கனை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் வட்டரக்க விஜித தேரர் பின் நுழைவாயில் ஊடாக பிரதேச சபைக்கு வருகை தந்தார்.​

பொலிஸாரின் பாதுகாப்புடன் தேரர் சபைக்கு வருகை தந்த பின்னர் வழமை போன்று சபை அமர்வுகள் இடம்பெற்றுள்ளது. எனினும், பிரதேச சபை வளாகத்தில் பெருமளவிலான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சபை நடவடிக்கைகளின் பின்னர் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வட்டரக்க விஜித்த தேரர் அங்கிருந்து வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top