News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்!

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்!


images (1)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில்

7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 5 முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் துணை முதல்வர் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதில் சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்சிம்ரத் கௌர் பாதல், ஸ்மிருதி இரானி ஆகிய 6 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர், பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவி வழங்கப்பட்டுள்ளது.

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில், நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே முஸ்லிம் மதத்தைச்
சேர்ந்தவர் ஆவார். மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் வயது குறைந்தவர், ஸ்மிருதி இரானி (38) ஆவார். அதிக வயதுடையவர், நஜ்மா ஹெப்துல்லா (74) ஆவார்.

மோடி அமைச்சரவையில், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பாஜகவுக்கு ஆதரவாக தீவிரமாக
செயல்பட்ட 4 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன், தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானி ஆகியோர் அந்த 4 பேர்.

மோடி அமைச்சரவையில், அவரையும் சேர்த்து முன்னாள் முதல்வர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் விவரம்: நரேந்திர மோடி (குஜராத்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), சுஷ்மா ஸ்வராஜ் (தில்லி), உமா பாரதி (மத்தியப் பிரதேசம்), சதானந்த கௌடா (கர்நாடகம்).

இது தவிர முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேயும் (மகாராஷ்டிரம்) மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

வாரிசுகளுக்கு இடமில்லை: மோடி அமைச்சரவையில், பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகள் யாருக்கும்
இடமளிக்கப்படவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த், சத்தீஷ்கர் முதல்வர் ரமண் சிங்கின் மகன் அபிஷேக், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த்,
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின்
மகன் ராஜ்பீர் சிங், ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலின் மகன் அனுராக் தாக்குர் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top