News Headlines
You are here: Home » கட்டுரைகள் » மே 2 ஆம் திகதி 2001 இலங்கை வாழ் முஸ்லிம்களால் மறக்க முடியாத நாள்

மே 2 ஆம் திகதி 2001 இலங்கை வாழ் முஸ்லிம்களால் மறக்க முடியாத நாள்


burning candle

மாவனல்லை மக்களால் மறக்கமுடியாத ஒரு நாளே 2001 மே 2 ஆம் திகதி மாவனல்லையில் அராஜகம் ஆட்சிபுரிந்த நாள். திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மூட்டி விடப்பட்ட இனக்கலவரத்தின் மூலம் மாவனல்லை மட்டுமின்றி முழு நாட்டு முஸ்லிம்களினதும் முதுகெலும்பை முறித்து விட சில இனவாதிகள் முயன்றனர். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட்ட இன வன்முறை முழு நாட்டையும் கலக்கி விட்டது. அத்துயர சம்பவம் நடைபெற்று இன்றைக்கு பதின்மமூன்று வருடங்கள் கடந்து விட்டன.

மாவனல்லையை பொறுத்தமட்டில் 2001 இல் அந்த கலவரம் நடப்பதற்கு முன்பே சில வருடங்களாகவே மாவனல்லை முஸ்லிம்களை வலிச் சண்டைகளுக்கு இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த எல்லா செயல்களுக்கும் காரணமானவர்கள் தான், கடைசியாக மாவனல்லை முஸ்லிம்களின் பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2001 ஏப்ரல் 30 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம்.

மாவனல்லை பஸ் தரிப்பு நிலையத்தில் 24 ஆம் இலக்க இடத்தில் அமைந்த ஹோட்டலில் 2001 ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு 8.45 மணி அளவில் கடையை மூடுவதத்கு ஆயத்த்மாகிக்கொண்டிருந்தனர். அபோது அங்கு வந்த காடயர்கள் வழமை போன்று நூறு ரூபாய் கப்பம் கேட்டனர். அதை தரமுடியாது என கூறியதும், 20 ரூபாவை ஹோட்டல் உரிமையாளரின் முகத்தில் எரிந்து “கோல்ட் லிப்” சிகரட் ஒன்றை கேட்டுள்ளனர். அதற்கு ஹோட்டல் உரிமையாளர் “கோல்ட் லிப் இல்லை பிரிஸ்டல் தான் உண்டு” என்று கூறியதும் அந்த காடயர்கள் “அதை தா” என கேட்டுள்ளனர். பின் சிகரட்டை கொடுத்து விட்டு மீதிப்பணத்தை கொடுக்கும் போது ஹோட்டல் உரிமையாளருக்கு தூஷன வார்த்தைகளால் ஏசியுள்ளனர்.

“ஏன் என்னை ஏசுகின்றிர்கள்” என கேட்டதற்கு தீடிரென பாய்ந்து ஹோட்டலில் இருந்த மூவரையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் ஹோட்டல் உரிமையாளரை மாவனல்லை மணிக்கூண்டு கோபுரத்துக்கு முன் இரு கைகளையும் கம்பி ஒன்றில் கட்டி அடித்து சித்தரவதை செய்து அவரது முகத்தில் கத்தியால் வெட்டினர்.
திரண்ட மக்கள் பலரும் பார்த்திருக்க இக் கொடுமை நடந்தது. அத்துடன் “முடியுமாயின் எந்த முஸ்லிமாவது இவனை காப்பாற்றி அழைத்துச் செல்லு” என சவாலும் இட்டுள்ளனர். அவ் இடத்துக்கு விரைந்த பொலிசார் அவரை மாவனல்லை வைதியசாலையில் அனுமதித்தனர்.

முன்னர் நடந்த பல அக்கிரமங்களையும் அநியாயங்களையும் பொறுத்துக்கொண்ட மாவனல்லை முஸ்லிம்களினால் இக்கொடுமையைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதற்காக அவர்கள் வரம்பு மீறிச் செல்லவும் இல்லை.

2001 மே முதலாம் திகதி மாலை ஆகியும் இக்கொடுமை தொடர்பாக எவ்வித பொலிஸ் நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் பெருமளவு முஸ்லிம்கள் மாவனல்லை பஸ் தரிப்பு நிலையத்தில், பொலிஸ் நடவடிக்கைகளை அறிவதற்காக ஒன்று கூடியிருன்தனர். அதேநேரம் சிங்கள மக்களும் கூட்டம்கூடி இருந்தனர். பின் அங்கு வந்த பொலிசார் அடுத்த நாள் (மே 2) காலை வரை அவகாசம் வேண்டும் என கேட்டனர். பின் முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

அடுத்த நாள் 2001 மே 2 ஆம் திகதி பொலிசார் பொருந்திய படி நடப்பதாக தென்படவில்லை. எனவே பொலிசார் நியாயமாக நடக்க வேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையில் மாவனல்லை முஸ்லிம்கள் நகர நடுவில் கூடினர், வந்தவர்களில் ஒரு சாரார் அவ்விடத்தில் அமைதி வழியில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டனர்.

ஆனால் நிலைமை யாரும் எதிர்பாராத அளவில் மோசமடைந்து சென்றது. பொலிசார் முஸ்லிம்கள் பக்கம் சுடவும், சிங்கள இனவாதிகள் கலவரத்தை துவங்கவும் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்தது. அதன் பின்னர் தீ வைத்தல், கொள்ளையிடல் என்பன பொலிசார் எதிரிலேயே தூவேசம் கொண்டவர்களாள் கன கச்சிதமகா அரங்கேற்றப்பட்டது. பின்னர் இக்கலவரம் வெகு வேகமாக அரநாயக்க, திப்பிட்டிய, ஹெம்மாத்துகம, கனேத்தன்ன போன்ற இடங்களுக்கும் மாவனல்லை நகரத்தை அன்மித்த பகுதிகளுக்கும் பரவியது.

இக் கலவரத்தினால் ஒரு முஸ்லிம் துப்பாக்கி சூட்டிக்கு இலக்காகி ஷஹிதாக்கப்பட்டார். 14 முஸ்லிம்கள் காயமடைந்தன்ர். 148 வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. இவற்றுள் சிங்கள சமுகத்தவறது சிறு வர்த்தக நிலையங்கள் 30 மட்டுமே! அத்துடன்முஸ்லிம்களின் 83 வீடுகள், 24 வாகங்கள், 1 நவீன பெற்றோல் நிலையம், 2 ஆடைத் தொழிற்சாலைகள், 1 இறப்பர் தொழிற்சாலை என்பனவும் உடைத்து நொறுக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் இருந்தன.

மேலும் ஒரு ஜும்ஆப் பள்ளியும் மற்றுமொறு பள்ளியும் எரித்து பலத்த சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. அத்துடன் இன்னும் 6 பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டன. புனித அல்குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன.

இறுதியில் இக்கலவரம் முஸ்லிம்களுக்கு பாரிய பொருள் செதத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. மாவனல்லை நிகழ்வை நோக்கும் போது திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதரத்தை சிதைக்கும் முயற்சியே என்பது வெட்ட வெளிச்சம் ஆகின்றது.

ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட இக்கொடுமைகளால் முழு நாட்டையும் கலக்கி விட்டது. பாராளுமன்றத்தை கூட்டி கதைக்கும் படி செய்து விட்டது. அப்போதைய‌ ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவும் மற்றும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள் சமுதாய நலன் பேணும் அமைப்புக்கள் என்பன அமைதி வேண்டி நிற்கவும் இக்கலவரம் காரணமகிவிட்டன.

இவை தொடர்பான செய்திகள் நாட்டின் ஒரு வகையான பீதியை ஏற்படுத்திவிட்டது. மாவனல்லை முஸ்லிம்களுக்காக நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்யவும், கடை அடைக்கவும் ஊர்வலம் போகவும் முற்பட்டனர். அத்துடன் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளியான பல பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாகவும், தொலைகாட்சி விவரணங்களாகவும் மாவனல்லை இடம் பிடித்துக்கொண்டது. மேலும் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இராணுவத்தின் உதவியுடன் கலவரம் முடிவுக்கு வந்தது. இச் சம்பவத்தின் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வந்த ஒற்றுமை சீர்குலைந்ததுடன், இரண்டு சமூகங்களிடையேயும் கலாச்சார, பண்பாட்டு ரீதியான இடை வெளியையும் ஏற்படுத்தியது

எது எப்படியோ அன்றும் இன்றும் மாவனல்லை முஸ்லிம்களும் சிங்களவர்களும் இனங்கி வாழ்ந்து வருகின்றனர். வியாபார கொடுக்கல் வாங்கள்களிலும் நெறுக்கமான உறவு கொண்டவர்கள். தற்பொழுதும் முஸ்லிம்களும் சிங்கள சகோதர மக்களும் மாவனல்லையில் மிக ஒற்றுமையுடனும் புரிந்துணர்வோடும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பது பிரதேசத்தில் வாழ்கின்ற புத்திஜீவிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த மக்களின் கடமையாகும்.

ஆயிரம் வருடங்கள் நிலவி வந்த சமூக நல்லிணக்கம் அழிவினை நோக்கி இன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது.மாவனல்லையில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுத்த சில இனவாதிகள் முற்படுகின்றனர். எனவே நாம் மிக புத்தியுடனும் பொறுப்புனர்வுடனும் நடந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும்.

இன முரன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற‌ ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாததாகும். எனினும் இவ்வேலைத்திட்டங்கள் எல்லா மட்டங்களிலும் குறிப்பாக மாவனல்லையைச் சூழவுள்ள எல்லாப் பகுதிகளிலும் கூட்டாகவும் தனித்தனியாகவும் நடை பெற வேண்டும்.

பிரச்சனைகள் உருவாக்கப்பட்ட பின்னர் அதனை தனிக்க கூட்டம் கூடி சுவைமிக்க கருத்து தெரிவிப்பதை விட அச‌ம்பாவிதங்கள் நடைபெற முன்னர் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் கருத்தரங்குகள் , கலந்துரையாடல்கள்,வழி காட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தபப்படுவது கட்டாயமாகும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்பூட்டல் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மிகத்தேவையானதாகும் .

தற்போது மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம், மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் பௌத்த சகோதரர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் இணைந்து மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம் என்ற பெயரில் அமைப்பொன்றினை தோற்றுவித்துள்ளனர். மாவனல்லையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மத ரீதியான இனக் கலவரமொன்றினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றமை குறுப்பிடத்தக்கது.

– மாவனல்லை நியூஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top