News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக திஹாரிய ஸரீனா பேகம் நியமனம்.

முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக திஹாரிய ஸரீனா பேகம் நியமனம்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக திஹாரிய சகோதரி ஸரீனா பேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தலைமையில் திஹாரியில் நடைபெற்ற மகளிர் அமைப்புடனான கலந்துரையாடலின் போதே சகோதரி ஸரீனா பேகம் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களினால் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்டார்.

இதன்போது மகளிர் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றியும், தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், மாதர் காங்கிரஸின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து திஹாரிய மத்திய குழு ஊடக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் திஹாரிய முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

01 02 03 04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top