News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » மட்டு. மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையினை தடுப்பதற்கான விழிப்புட்டும் நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டு. மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையினை தடுப்பதற்கான விழிப்புட்டும் நடவடிக்கைகள் ஆரம்பம்


ஜூன்-12 சர்வதேச சிறுவர் உழைப்பு ஒழிப்பு தினத்தையொட்டி ஜூன் 09 தொடக்கம் 15 வரை சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய செயற்பாட்டு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கினங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் (14) பதிநான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையினை தடுப்பதற்கான விழிப்புட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக நேற்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ‘சிறுவர் தொழிலாளர்கள் அற்ற சமூகத்தினை கட்டியொழுப்ப ஒன்று படுவோம்’ எனும் விழிப்புட்டும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள்,இராணுவத்தினர், கிராமிய சிவில் சமூக சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் பாதுகாப்பு விடயம் பற்றியும்,அதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் எம்.சீ. அன்சார் பொது மக்களுக்கு சிறுவர் பாதுகாப்பு நல விடயங்களை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாவும், அவர்களை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக குரல் கொடுக்க செய்வது தொடர்பான அனுகு முறை பற்றியும்,சிறுவர் துஷ்பிரயோகங்களை கன்;டால் இலங்கை சிறுவர் தொலைபேசி இலவச சேவையான 1929 என்ற இலக்கத்திற்கு பொது மக்கள் தாம் பேசும் எம் மொழியிலும் தொடர்பு கொள்ள செய்வதற்கான இலகுவான வழியினை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர்; கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாடசாலைகள்,பஸ்தரிப்பிடம் பொதுச் சந்தைகள், கடைகள், மற்றும் வைத்தியசாலை போன்ற மக்கள் செறிந்து நடமாடும் பல்வேறு பகுதிகளில் சிறுவர் உழைப்பிற்கு எதிரான சிறுவர் உரிமை பாதுகாப்பு விடயங்கள் உள்ளடங்கிய விழிப்புட்டும் துண்டுப் பிரசுரங்கள் சிறுவர் பாதுகாப்பு குழுவினரால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.ரீ.எம்.பாரிஸ்

MATSIAS01 MATSIAS02 MATSIAS03 MATSIAS04 MATSIAS05 MATSIAS06 MATSIAS07 MATSIAS08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top