News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » பொது பல சேனாவுக்கு அரசு வழங்கிய சன்மானம்தான் “ சமய போலிஸ் பிரிவு”

பொது பல சேனாவுக்கு அரசு வழங்கிய சன்மானம்தான் “ சமய போலிஸ் பிரிவு”


ரிஷாத் அமைச்சரின் அமைச்சினுள் அத்து மீறி புகுந்து அட்டக்காசம் புரிந்த பொது பல சேனாவுக்கு அரசு வழங்கிய சன்மானம்தான்  “ சமய போலிஸ் பிரிவு”கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்நாட்டு

முஸ்லிம்கள் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவது பகிரங்கமான விடயம்.

இந்த பொது பல சேனா சட்டத்தை தன் கையிலெடுத்து இந் நாட்டின் “அறிவிக்கப் படாத போலிஸ்” என்று தம்மை அடையாளப் படுத்தி வந்த நிலையில் இறுதியாக அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதொரு அமைச்சரின் அமைச்சினுள் அத்து மீறி புகுந்து அட்டக்காசம் புரிந்த பொது பல சேனாவுக்கு அரசு வழங்கிய சன்மானம்தான்  “ சமய போலிஸ் பிரிவு”. பௌத்த சாசன அமைச்சின் கீழ் ஏற்படுத்தப் பட்டுள்ள மேற்படி போலிஸ் பிரிவால் எதிர்காலத்தில் மேலும் பல சிக்கல்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதில்வேறு ஞான சார தேரோ கூறுகிறார் மிக நீண்ட காலம் தம்மால் விடுக்கப் பட்ட கோரிக்கைதான் இந்த சமய போலிஸ் பிரிவு என்று. ஆகவே இந்த பௌத்த சாசன அமைச்சின் கீழ் ஏற்படுத்தப் பட்டுள்ள சமய சம்பந்தமான விடயங்களுக்கான போலிஸ் பிரிவை தாம் வன்மையாக எதிர்கின்றோம்.  என்று நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிராஸ் தலைவருமான  அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

எதிர் வரும் ஊவா மாகாண சபைத்தேர்தல் விடயமாக, பதுளை கிரீன் மௌவுன்ட் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாடுகையில் மேற்படி கருத்தை தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில்,” முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இனிமேல் இந் நாட்டு ஆட்சி பீடத்திலிருக்கும் எம்மை அசைக்க முடியாது என்ற பெருமையில் இருந்த நிலையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலை இவ்வரசாங்கம் நடத்தியது.

அதை தொடர்ந்து நடத்தப் பட்ட ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சி அபேட்சகராக போட்டியிட வேண்டாம் என்று கூறி அவரை தடுத்ததிலும் ஒரு பொது அபேட்சகரை மகிந்தவுக்கு எதிராக போட்டியிட செய்ததிலும் பெரும் பங்கை வகித்தவன் நான். அன்றிருந்த அரசியல் களநிலவரத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரம சிங்க ஜனாதி அபேட்சகராக போட்டியிட்டிருந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் அத்தோடு அடிபட்டு போயிருக்கும்.  அரசாங்கத்திற்கு அன்றிருந்தத யுத்தவேற்றியின் கர்வமும் பெருமையும் கடைசியாக நடத்தப் பட்ட மாகாண சபை தேர்தல் சுற்றில், அதாவது மேல் மாகாண ,தென்மாகாண சபைகளுக்கான தேர்தல்களில்  வெகுவாக தளர்ந்து உள்ளதை அவதானிக்க கூடியதாக  உள்ளது. சரத் பொன்சேகா அவர்களின் கட்சி பெற்ற வாக்குகள், ஜே வி பி பெற்ற வாக்குகள், ஐக்கிய தேசிய கட்சி பெற்ற ஆசனங்களில்  வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், பிரயோகிக்கப் படாத வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் என்ற கணிப்பும் இன்று அரசாங்கத்தை கிளி கொள்ளச் செய்துள்ளது.

ஆகவே நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலை நாம் வெறுமனே இத் தேர்தலானது வெறும் ஊவா மாகாணத்திற்கான தொரு தேர்தலாக மட்டும்  கருதாமல் தேசிய அரசியலில்  எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு ஒளியை காட்டக் கூடிய தேர்தலாக கருதி நாம் கட்சி இயக்க பேதங்களை மறந்து ஓரணியாக திரண்டு இத்தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைபாடாக உள்ளது. இதற்காக நாம் நமது கட்சி சின்னத்தை இழந்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளோம் என்றும் தெரவித்தார்.

இந் நிகழ்வின் வாரவேட்புரையை பதுளை ஜும்மா பள்ளிவாயில் கதீப் இர்ஷாத் மூமீன் அவர்கள் நிகழ்த்தியதுடன், பதுளை ஜும்மா பள்ளி நிர்வாக சபை தலைவர் அல் ஹாஜ் இம்தியாஸ் பகீர்டீன் அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்கள். இதன் போது “ ஊவா மாகாண முஸ்லிம் பிரதி நிதித்துவம் காலத்தின் கட்டாயமானதொரு தேவை என்றும், முஸ்லிம்களின்  எந்த ஒரு தேவைக்காக மாகாண சபைக்கு சென்றாலும் எமது பிரதிநிதியொருவர் அங்கே இல்லாத காரணத்தால் பலவகையான ஏளன பார்வைகளுக்கு உள்ளாக்கப் படுவதாகவும் தெரிவித்ததுடன் , முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை உறுதியாக பெறுவதற்கு  முஸ்லிம் வாக்குகளை பிரிவதற்கு இடமளிககாமல் கூட்டமைப்பாக இணைந்து இத்தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது என்று தமது பிரேரணையை முன்வைத்தார்.    (Lanka Muslim)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top