News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » பூமியை போன்ற இராட்சத உலகம் கண்டுபிடிப்பு

பூமியை போன்ற இராட்சத உலகம் கண்டுபிடிப்பு


w1406043

– தினகரன் –

“இராட்சத பூமி என்று வானியலாளர்களால் அழைக்கப்படும் புதிய கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எமது பூமி யைப் போன்றே கடினமான மேற்பரப்பை கொண்டதாக இந்த கிரகம் இருந்தபோதும் இது பூமியை விடவும் மிக மிகப் பெரியது என்று வானியலாளர்கள் குறிப்பி ட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியை விடவும் சுமார் 17 மடங்கு பெரிதாகும்.

கெப்ளர்-10சி என பெய ரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் 560 ஒளியாண்டு கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றை வலம்வருகிறது. பொஸ்ட னில் நடந்த அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் கூட்டத்தில் வைத்தே புதிய கிரகம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு கிரகங்கள் தொடர்பில் வானியலாளர்களிடம் இருந்த கருதுகோளை பிழையாக்குவதாக அமைந்துள்ளது. இராட்சத உலகங்கள்; தனக்குள் அதிக ஐதரசனை இழுத்துக்கொள்ளும் என்றும் அவ்வாறான கிரகங் கள் வியாழன் அல்லது நெப்டியுன் கிரகங்கள் போன்றே இருக்கும் என்று வானியல் கோட் பாட்டாளர்கள் நம்பி வந்தனர்.

“இந்த கிரகத்தை சரியாக குறிப்பிடுவதென் றால் ஒரு ‘சுப்பர் ஏர்த்’ அல்லது பிரமாண்ட பூமி என்று அழைக்கலாம்” என்று வானியல் ஆய்வு தொடர்பான ஹார்வட் ஸ்மித்சன் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டிமிடர் சசலொவ் விபரித்தார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் கெப்ளர் விண்வெளி தொலை நோக்கி ஊடாக இந்த கிரகம் கண்டுபிடிக்க ப்பட்டதாலேயே இதற்கு கெப்ளர்-10சி என பெயரிடப்பட்டுள்ளது.

தனது நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது ஏற்படும் மங்கலான ஒளியை கொண்டே இந்த புதிய உலகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் குறித்த கிரகத்தின் விட்டம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அகலம் பூமியை விடவும் 29,000 கிலோ மீற்றர் அல்லது இரு மடங்கை விடவும் சற்று அதிகமாகும் என்று கணிக் கப்பட்டது.

பின்னர் கெனரி தீவுகளில் இருக்கும் நஸி யோனல் கலிலியோ தொலை நோக்கியை கொண்டு 10சி கிரகம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு குறித்த கிரகத்தின் திணிவை கணிக்க அது வலம்வரும் நட் சத்திரத்தினுடனான ஈர்ப்புவிசை அவதானிக்க ப்பட்டுள்ளது.

பின்னர் விட்டம் மற்றும் திணிவு ஆகியவ ற்றை ஒருங்கிணைத்து பார்த்தபோது கெப்ளர ;-10சி கிரகம் ஒரு வாயு உலகமாக இருக்க முடியாது என்றும் மிக அடர்த்தியான பொருள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் வானியலாளர்கள் முடிவுக்கு வந்து ள்ளனர்.

“இது பூமியை விடவும் 17 மடங்கு பெரி தானதாகும். இது கன சென்டி மீற்றர் ஒன் றுக்கு 7.5 கிராம்கள் வீதம் அடர்த்தி கொண் டதாக உள்ளது.

இது எமது பூமிப் பாறையை விடவும் அதி கமாகும் (5.5கி/3செ.மீ.),” என்று பேராசிரியர் சசலொவ் குறிப்பிட்டார்.

“என்றாலும் இது ஒரு பிரமாண்ட கிரகமா கும். எனவே அங்குள்ள கணிமங்கள் அதிக அழுத்தம் கொண்டதாக இருக்கும். அங்கு பாறை மற்றும் விரைந்து ஆவியாகும் பொருட்களின் சேர்க்கை உள்ளடங்கியதாக இருக்கும்.

இந்த கிரகத்தின் நீர் 5-15 வீதமாக இருக்க வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் விபரித்தார்.

குறித்த கிரகம் வலம் வரும் நட்சத்திரம் சுமார் 11 பில்லியன் ஆண்டு வயது கொண்ட தாகும். இது பிரபஞ்ச வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும்.

“கெப்ளர்-10சி கிரகத்தின் கண்டு பிடிப்பின் மூலம் நாம் கருதியதை விடவும் ஆரம்ப காலத்திலேயே பாறை உலகம் உருவாகி இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே பாறை இருந்தால் அங்கு உயிர் வாழ்வதற்கும் வாய ;ப்பு இருக்கிறது” என்று பேராசிரியர் சசலொவ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top