News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » புயல் வேகம்! மணிக்கு 173.9 km பந்து வீசி மோர்னே மோர்க்கெல் சாதனை-Video

புயல் வேகம்! மணிக்கு 173.9 km பந்து வீசி மோர்னே மோர்க்கெல் சாதனை-Video


டெல்லி டேர் டெவில் அணியில் இடம் பெற்றுள்ள மோர்னே மோர்க்கெல் கடந்த 16ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது மணிக்கு 173.9 km வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் அதிவேகமாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை கடக்கவேண்டும் என்பது பல வேகப்பந்து வீச்சாளர்களின் கனவாக இருக்கும். ஆனால் நேற்றைய முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர் டெவில் அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்க்கெல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மணிக்கு 173.9 km வேகத்தில் பந்து வீசி புயல்வேகப் பந்து வீச்சாளர் என்று நிரூபித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்தான் புயல்வேகப் பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்படுபவர். இதற்காக ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற பட்டப்பெயரும் அவருக்கு உண்டு. களத்தில் அக்தரின் பந்து வீச்சினை எதிர்கொள்ள பெரும்பாலான வீரர்கள் நடுங்குவார்களாம். ஆனால் இப்போது அவரையும் விட வேகமாக பந்து வீசி கலங்கடித்துள்ளதர் மோர்க்கெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top