News Headlines
You are here: Home » தொழில்நுட்பம் » பிழையின்றி எழுதச் செய்யும் புதுமையான எழுதுகோல்!

பிழையின்றி எழுதச் செய்யும் புதுமையான எழுதுகோல்!


எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத உதவும் புதுமையான எழுதுகோல் ஒன்றை ஜெர்மனி நாட்டு நிபுணர் டேனியல் காஸ்மாஷெர் (33) என்பவர் உருவாக்கியுள்ளார்.
.
இதனைக் கொண்டு எழுதும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டாலோ அல்லது முறையாக எழுதத் தவறினாலோ அது அதிர்வு அலைகளை உருவாக்கி எச்சரிக்கை செய்யுமாம். இதன் பொருட்டு சிறு மின்கலனுடன் இணைந்த கணினியொன்று இந்த எழுதுகோலுடன் இணைக்கப்பட்டிருக்கிறதாம்.
.
இந்த எழுதுகோலை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டதற்கு டேனியல் பதிலளிக்கையில் ‘நண்பரின் பத்துவயது மகன் வீட்டுப்பாடம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டதைக் கண்டதாகவும், அவனுக்கும் உதவும் நோக்கம் கொண்டு சிந்தித்ததில் இப்படியொரு கண்டுபிடிப்புக்கு வழிகோலியது’ என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top