News Headlines
You are here: Home » அயலூர் » பிரதம பொலிஸ் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சாரதி – நிட்டம்புவ பிரதேசத்தில் சம்பவம்

பிரதம பொலிஸ் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சாரதி – நிட்டம்புவ பிரதேசத்தில் சம்பவம்


பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கன்னத்தில் அறைந்த பஸ் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிர்வாகப் பிரிவு பிரதம பொலிஸ் பரிசோதகர் எல்.ஆர். விதாரண மீது, தனியார் பஸ் சாரதியொருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி சிவில் உடையில் நிட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் வாகனமொன்றில் பயணித்த பொலிஸ் அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ் சாரதி வாகனத்தைச் செலுத்துவதனை பார்வையிட்ட அதிகாரி அது குறித்து அருகாமையில் இருந்த பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸ் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது பொலிஸ் அதிகாரியும் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அதன் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தினால், பொலிஸ் அதிகாரியை பஸ் சாரதி கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்து அத்தனகல்ல நீதவானிடம் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top