News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்

பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்


அத்தனகல்ல பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இரு அணிகள் செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் ம. க. அணியும், கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி அணியும் மோதிக்கொண்டன. இதில் திஹாரிய அல்-அஸ்ஹர் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது இடத்தை கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணியும், மூன்றாவது இடத்தை நிட்டம்புவ சங்கபோதி அணியும் பெற்றுக்கொண்டது.

அதேவேளை 18 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் திஹாரிய அல்-அஸ்ஹர் ம. க. அணியும், கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி அணியும் மோதிக்கொண்டன. இதில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா வெற்றி பெற்றதுடன், இரண்டாவது இடத்தை அல்-அஸ்ஹர் அணியும், மூன்றாவது இடத்தை வெயாங்கொட சென்றால் அணியும் பெற்றுக்கொண்டது.

16 வயதுக்குட்பட்ட போயிட்டியின் இறுதிப் போட்டியிலும் திஹாரிய அல்-அஸ்ஹர் அணி செம்பியன் பட்டத்தை வென்றது. இதில் இரண்டாவது இடத்தை கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி அணி பெற்றுக்கொண்டது

அத்தனகல்ல பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 45 பாடசாலை அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மூன்று அணிகளும் வலயமட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் ஜனாப் அஸ்மிர் திஹாரிய நியூஸ் இற்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top