News Headlines
You are here: Home » வினோதம் » நூறு வருடங்களின் பின் நடந்த அதிசயப் பயணம்

நூறு வருடங்களின் பின் நடந்த அதிசயப் பயணம்


( Hisham Hussain, Puttalam Times )

சரியாக 100 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் 5 ஆம் திகதி நல்லிரவில் புகையிரதமொன்று சாரதி இல்லாமல் பயணித்துள்ளது.

*இரண்டு புகையிரத எஞ்சின்களும் மாளிகாவத்தை புகையிரத மேடையில் இருந்து பயணித்துள்ளது

*அதுவும் ஒரே நாள் ஓரே நேரத்தில் ஒரே திசையை (கோட்டை) நோக்கி சென்றுள்ளது

*இவ் இரண்டு சம்பவங்களிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை

சாரதி இல்லாமல் புகையிரத என்ஞினொன்று தானியங்கியாகப் பயணித்ததைப் போன்று சரியாக அன்றைய திகதிக்கு நூறு வருடங்களுக்கு முன்னர், 1913 டிசம்பர் 02 ஆம் திகதி சரியாக நல்லிரவு 1.45 மணியளவில் மாளிகாவத்தை மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதமொன்று தானாக இயங்கி பயணித்துள்ளது.

முதல்முறையாக தானியங்கியாகப் பயணித்த புகையிரதம் கெலனிவெளி பாதையிலிருந்து மாளிகாவத்தை, மரதானையைக் கடந்து கோட்டை புகையிரத நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்கு அருகில் நின்றுள்ளதாக ‘தினமின’ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது சுமார் 3.5 கி.மீ. தூரம் வரைப் பயணித்திருந்தது.

(படத்தின் வலது முனைக் கீழ் பகுதியில் 0.35 சதத்திற்கு விற்கப்பட்ட ‘தினமின’ பத்திரிகையின் செய்திப் பகுதியை (கருப்பு வெள்ளை) காணலாம்)

dsa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top