News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று காலை திஹாரியில் ஆரம்பம்

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று காலை திஹாரியில் ஆரம்பம்


வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திஹாரிய ஐக்கியம் பேணும் முஸ்லிம் அமைப்பு விழிப்புணர்வு நடவடிக்கையோன்றை முன்னெடுக்கவுள்ளது.

“சமூகத்தின் எழுச்சியா? வீழ்ச்சியா? தீர்மானிக்கப்போவது உங்கள் வாக்குகள்” எனவும் தொனிப்பொருளில் அச்சிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை ஐக்கியம் பேணும் முஸ்லிம் அமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிமுதல் வீடுவீடாக சென்று விநியோகிக்கும் திட்டத்தை திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஊர்மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

– வாக்கு எமது உரிமை – பயன்படுத்துவது எமது கடமை –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top