News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » தெவனகல முஸ்லிம்களை வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவிப்பு.

தெவனகல முஸ்லிம்களை வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவிப்பு.


மாவனல்ல தெவனகல மலைக்குன்றுக்கு அண்மையிலுள்ள ஹெமிமாதகம பகுதியில் வசிக்கும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவித்துள்ளது.

கேகாலை கச்சேரியில் இது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்ட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது .மாவனல்ல தெவனகல மலைக்குன்றில் அமைந்துள்ள விகாரைக்கு கீழ் அந்த குன்றைச் சுற்றியுள்ள பகுதியில் 400 மீட்டர் பிரதேசத்தை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அகழ்வாராய்ச்சிக்காக பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தே இந்த முஸ்லிம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து விளக்கமளித்து வருவதாக முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top