News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா

தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா


திஹாரிக்கு புதிய அரச ஆரம்பப் பாடசாலை ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியளித்துள்ளது.

அந்தவகையில், கத்தொட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 60 பேர்சஸ் காணியில் ஆரம்பப் பாடசாலைக்கான முதலாவது கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கள் நாட்டு விழா எதிர்வரும் திங்கட் கிழமை (19) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த கட்டிடம் குவைட் நாட்டின் நிதியுதவியுடன், அஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லாஹ் (நளீமி) யின் தலைமையிலான அல்-ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த ஆரம்பப் பாடசாலை திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் ஓர் துணைப் பாடசாலையாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீலால் நோனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஊர்மக்கள் அனைவரிடமும் ஏற்பாட்டுக்கு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top