News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்


ஜப்பானின் கிழக்குக் கடற்கரையில், ஃபுகுஷிமா நகரம் அருகே திங்கள்கிழமை காலை இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் கடற்கரையில் இருந்து, 91 கி.மீட்டர் தொலைவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த தீவுக்கு அருகே 5.6 ரிக்டர் அளவில், இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்க பாதிப்புகள் குறித்து, உடனடி தகவல்கள் இல்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த கிழக்கு கடற்கரைப் பகுதி, 2011ஆம் ஆண்டில் சுனாமியால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில், 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top