News Headlines
You are here: Home » வினோதம் » குடிகாரன் ஸ்பெஷல் – வித்தியாசமான மதுபானங்கள்

குடிகாரன் ஸ்பெஷல் – வித்தியாசமான மதுபானங்கள்


மதுபானங்கள் மீது மோகம் உள்ளவர்களின் வீதத்தை கண்டறிய கணிப்பீடு நடத்தினால் உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் அதனை விரும்பி அருந்துபவர்களாகவே இருப்பர். மதுபானங்களுக்கு அப்படியொரு வரவேற்பு.

நம்நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் கல்யாண வீடாகட்டும் மரண வீடாகட்டும் சாஸ்த்திர சம்பிரதாயங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு மதுவுக்காகவே அலையும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்துக்கொண்டிருக்கும். அப்படியானவர்களுக்குத் தான் இந்த விசேட மதுபான வகை

08-1381211858-1-snakewine-600_copy

 

பாம்பு வைன் (Snake Wine)

உலகிலேயே இந்த ஒயின் மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடைய நாகப்பாம்பை மூன்று மாதமாக நீரில் போட்டு பதப்படுத்தி வைத்து, பின் அதனை குடிப்பார்கள். இதனைக் குடித்தால், வாதநோய் குணமாவதோடு,  பாலியல் ஆர்வம் அதிகரிக்குமாம். குறிப்பாக இந்த வைன் சீனாவில் அதிகம் கிடைக்கும்.

08-1381211911-2-scorpionwhiskey-600

தேள் விஸ்கி (Scorpion whiskey)

இந்த விசித்திரமான பானமானது கருந்தேளை, ஜின்செங் வேர் மற்றும் சில மூலிகைகளின் விதைகள் ஆகியவற்றை விஸ்கியில் ஊற வைத்து செய்யப்படுவதாகும். இந்த தேள் விஸ்கியானது இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தசை வலிகளுக்கும் சிறந்தது.

08-1381211937-3-mousewine-600

எலி வைன் (Mouse Wine)

சீனாவில் கிடைக்கும் இந்த எலி வைன், பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. இது சில சீன மூலிகைகள், வேர்கள் மற்றும் எலிக் குட்டி ஆகியவற்றை நீரில் போட்டு மூன்று வருடங்கள் ஊற வைத்து செய்யப்படுவதாகும். முக்கியமாக இந்த எலி வைன் ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்தது.

08-1381211976-4-squirrel-600

அணில் பியர் (Squirrel beer)

அணில் பியர் தான் உலகிலேயே மிகவும் ஸ்ட்ரோங்கான பியர். இதனை ஒரு சிப் குடித்தாலே, போதை தலைக்கு ஏறிவிடும். அதற்கேற்றாற் போல் இதன் விலை மிகவும் அதிகமானது.

Bacon V_copy_copy

பேகன் வோட்கா (Bacon Vodka)

எந்த இறைச்சியானாலும் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டும் தான் இந்த பேகன் வோட்காவை குடிக்க முடியும். ஏனெனில் சமைத்த பன்றி இறைச்சியை வோட்காவில் சேர்த்து செய்யப்படுவதாகும். மேலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பானம் மிளகு மற்றும் வேக வைத்த பன்றியின் வாசனையோடு இருக்கும்.

Three lizared

பல்லி மதுபானம் (Three Lizard Liquor)

உலகிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் மதுபானத்தை சுவைக்க நினைத்தால், அதற்கு பல்லி மதுபானம் தான். இந்த மதுபானத்தில் மூன்று பல்லியை ஊற வைத்து செய்வார்கள். இது மிகவும் விலை அதிகமானது. இதனை ஒரு மிடர் குடித்தாலே, உடலில் சக்தி அளவுக்கு அதிகமாகவிடும்.

08-1381212090-7-seagull-600

கடற்பறவை வைன் (Seagull Wine)

இந்த வைனானது இறந்த கடற்பறவையை தண்ணீரில் போட்டு பதப்படுத்தி செய்யப்படுவதாகும். இதுவும் உலகில் உள்ள மக்களால் விரும்பி பருகப்படும் வைன்களுள் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top