News Headlines
You are here: Home » ஜனாஸா » கம்பஹா வைத்தியசாலை ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்த அல் -அஸ்ஹர் மாணவன் மரணம்.

கம்பஹா வைத்தியசாலை ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்த அல் -அஸ்ஹர் மாணவன் மரணம்.


திஹாரிய புளியமரத்தடி பிரதேசத்தில் மரத்திலிருந்து விழுந்து பலத்த காயங்களுடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவன் முஹம்மட் அஹ்சன் இன்று அதிகாலை காலமானார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டு ரம்புட்டான் மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து கிணற்று கங்ரீட் கட்டில் தலை அடிபட்டு பலத்த காயங்களுடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் முஹம்மட் அஹ்சன் அங்கிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட முஹம்மட் அஹ்சன் அங்கு ICU வில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், இன்று அதிகாலை சிகிச்சைகள் பலனின்றி மரணமடைந்ததாக அவரது உறவினர் ஒருவர் திஹாரிய நியூஸ் இற்குத் தெரிவித்தார்.

புளியமரத்தடி முஹம்மட் நிஸாம்டீன் மற்றும் பாத்திமா ரியாஸா ஆகியோரின் அன்பு மகனாகிய முஹம்மட் அஹ்சன் நான்கு பிள்ளைகலுள்ள குடும்பத்தில் இரண்டாமவர் ஆவார்.

அல் -அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மாணவராகிய முஹம்மட் அஹ்சனின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top