News Headlines
You are here: Home » கட்டுரைகள் » கட்டாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் பொது பல சேனாவும்.

கட்டாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் பொது பல சேனாவும்.


– U.H. Hyder Ali –

கட்டாரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த சில இளைஞர்கள் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக எதிர்வரும் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்திருக்கிறார்கள்.

விடயத்தை மோப்பம் பிடித்த கட்டாரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் உளவுப்பிரிவு அதனை தடுக்கும் நோக்கில்கத்தார் போலீஸில் அந்தக் குழுவினருக்கு எதிராக புகார் செய்திருக்கிறார்கள்.

கட்டார் போலீஸ் அவர்களைக் கைது செய்து தீர விசாரித்ததன் பின்னர் அவர்கள் பக்க நியாயத்தை புரிந்துக் கொண்டுஅவர்களை விடுதலை செய்து விட்டதாக அறியக் கிடைத்தது.

இலங்கையின் உளவுப்பிரிவுக்கு கட்டாரில் வைத்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வது கடினம்.காரணம் கட்டாடிரில் இருக்கும் நீதிச்சட்டம். எனவே அவர்கள் இவ்வாறான ஒரு முன் எடுப்பபை முன்எடுத்திருக்கிறார்கள்.

கட்டாரில் இருந்து சகோதரர் றிஸ்வான் தனது தாயக முஸ்லிம் உம்மாவின் நலனில் உள்ள அக்கறையுடன் தனதுசக்திக்கு ஏற்ப இவ்வாறாணன ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். நிச்சயம் அவரது இந்த முயற்சிவரவேற்கத்தக்கதுஇ போற்றத்தக்கது.

சகோதரர் றிஸ்வான் ஒரு ஆர்பாட்டப் பேரனி ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாகத்தான் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  அரபு நாடுகளில் இருந்து எமக்கு கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்களை மேற் கொள்வது கடினம். இருந்தாழும் நாம் அங்கிருந்து எவ்வாறான முயற்சிகளை மேற் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.

ஆனால் இந்த சகோதரர் இவ்வாறான முயற்சியில் இறங்கியதும் அதனை கட்டாரில் உள்ள இலங்கை ஜமாத் ஈஇஸ்லாமி மற்றும் ஸ்ரீலங்கா தஃவா மத்திய நிலையம் போன்றவைகள் வழமை போல் இதனை விமர்சிக்கத்தொடங்கிவிட்டனா.;

வேகத்தை விட விவேகம் வலுவானது என்கின்ற இந்த வசனத்தை பாவித்தே இலங்கையில் உள்ள ஜம்மியதுல்உலமாவும்இ  ஜமாத் ஈ இஸ்லாமியும் கடந்த காலங்களில் இலங்கை வாழ் இளைஞர்களது உணர்வுகளை மதிக்காமல்அடக்கி ஒடுக்கி அவர்களது சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பெறுமதி இல்லாமல்ஆக்கிவிட்டார்கள்.

கடினம். இருந்தாழும் நாம் அங்கிருந்து எவ்வாறான முயற்சிகளை மேற் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு செயற்படுத்துங்கள்

இங்கும் கட்டாரில் இருந்து இந்த முயற்சியை மேற்கொள்ளும் சகோதரர் றிஸ்வான்  அவர்ளது செயற்பாடுகளையும்அடக்க முயற்சிக்கும் சகோர்கள் தயவு செய்து அவரை விமர்சிக்காது இந்த முயற்சிக்கு உங்களது வழிகாட்டல்களைவழங்கி அவரை நெரிப்படுத்துவதற்காக முயற்சியுங்கள். அவரிடமுள்ள திறமைகளை சமுகத்தின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு உதவுங்கள்.

பொதுவாக கட்டாரில் உள்ள ஜமாத ஈ இஸ்லாமி, உறுப்பினர்கள் தங்களைத்தவிர ஏனையவர்கள் சமூக நலச்செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று எண்ணுவது மிகவும் ஒரு கீழ் தரமான செயலாகும். தயவு செய்து இவ்வாறானசெயற்பாடுகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றினைத்து அனைவருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கி இந்தசெய்படுகளில் எமது ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள்.

சகோதரர் றிஸ்வான் அவர்களது செயற்பாடுகள் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள.; எல்லாம் வல்ல இறைவன் எமதுசெயற்பாடுகளை பொருந்திக்கொள்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top