News Headlines
You are here: Home » அயலூர் » எமது கிராம இளைஞர்களின் நிதானம் அசம்பாவிதத்தைத் தடுத்தது – கஹட்டோவிட்ட பிரதேச மக்கள்

எமது கிராம இளைஞர்களின் நிதானம் அசம்பாவிதத்தைத் தடுத்தது – கஹட்டோவிட்ட பிரதேச மக்கள்


கம்பஹா மாவட்ட, கஹட்டோவிட்ட கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் போது, அப்பிரதேச முஸ்லிம்கள் நிதானமாக செயற்பட்டதனால், இனவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது,

நேற்று மாலை 5.00 மணியளவில் கஹட்டோவிட்டாவிலுள்ள கையடக்கத் தொலைபேசி திருத்தும் கடையொன்றுக்கு அயல் கிராமத்தைச் சேர்ந்த இரு பெரும்பான்மை சகோதரர்கள் பிரவேசித்துள்ளனர். தொடர்பற்ற முறையில் இனத்துவேஷத்தைக் கக்கக் கூடியவாறு வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர்.

பின்னர், வீதி வழியே முஸ்லிம்களை ஆத்திரமூட்டக் கூடிய முறையில் வார்த்தைகளை பிரயோகித்தவாறு சன நடமாட்டமுள்ள இடங்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது, இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த பெரும்பாலான  ஊர்வாசிகள் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வில்லை.

இதனையடுத்து உடனே, மோட்டார் சைக்கிள் இலக்கத்துடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளதுடன், ஊர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்ததாக அக்கிராமவாசிகள் தெரிவித்தனர்.

நன்றி – டெய்லி சிலோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top