News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கம்பஹாவில் பாதயாத்திரை


ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சிறுவர் தினம் நிமித்தம் அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் பாத யாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதே செயலகம், பொலிஸ் என்பன இவ்விசேட பாதயாத்திரையை ஏற்பாடு செய்துள்ளது.

சிறுவருக்கு நட்புறவான சூழல், உலகை போன்றும் கரங்கள் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பாதயாத்திரை ஒக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணிக்கு கம்பஹா போதி ஶ்ரீ வீதிக்கு அருகாமையில் ஆரம்பமாகி கம்பஹா ரயில் நிலையம் வரையில் செல்லவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், தொண்டு அமைப்புக்கள், அரச நிறுவன அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள சிறுவர் உரிமையை பாதுகாத்து சிறுவர் துஷ்பிரயோகத்தை அழித்தொழிப்பதே இப்பாதயாத்திரையில் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top