News Headlines
You are here: Home » வினோதம் » உலகின் மிகப்பெரிய பூ பெல்ஜியத்தில் மலர்ந்தது

உலகின் மிகப்பெரிய பூ பெல்ஜியத்தில் மலர்ந்தது


உலகில் மிகப்பெரிய மற்றும் துர்நாற்றம் வீசும் மலர் பெல்ஜியமின் தேசிய தாவரவியல் பூங்காவில் மீண்டும் ஒரு முறை பூத்துள்ளது. இதனை பார்க்க நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்துள்ளனர்.

அரிதாக பூக்கும் டைட்டன் அரும் என்ற இந்த மலர் 2.44 மீற்றர் (8 அடி) உயரத்துக்கு வளரும். இது கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின் மூன்றாவது முறையே தற்போது பூத்துள்ளது. அழுகிய இறைச்சி வாடையை ஏற்படுத்துவதால் இதனை ‘பிணப் பூ’ என்றும் அழைக்கின்றனர்.

எனினும் அதனது வாடை மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்ந்திழுக்கிறது. இந்த பூ வாடிவிடும் முன்னர் பறவைகளை கவரும் ஒரு பழத்தை உருவாக்கும். டைட்டன் அரும் பூ சுமத்திராவின் வெப்ப மண்டல காடுகளில் வளர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top