News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » உலகின் அதிக எடையுள்ள மனிதர் மரணம்! – Photos

உலகின் அதிக எடையுள்ள மனிதர் மரணம்! – Photos


உலகின் அதிக எடையுள்ள மனிதர் என்பதற்காக, 2006ல், ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மானுவேல் உரிபே, 48, நேற்று உயிரிழந்தார்.

கின்னஸ் விருது பெற்ற போது, அவரின் உடல் எடை, 560 கிலோவாக இருந்தது. அதன்பின் அவர் மேற்கொண்ட உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியால், 2007ல், 381 கிலோவாக எடையை குறைத்த அவர், கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதிக இதய துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். எனினும், அவரின் மரணத்திற்கு அதிக உடல் எடை தான் காரணம் என்பதை, டாக்டர்கள் உறுதிபடுத்தவில்லை.

FAT 03 FAT 01 FAT 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top