News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » உயர் தர செயற்திட்டத்தை (A/L – Project) வெற்றி பெற்ற மாணவனின் புதிய கண்டுபிடிப்பு.

உயர் தர செயற்திட்டத்தை (A/L – Project) வெற்றி பெற்ற மாணவனின் புதிய கண்டுபிடிப்பு.


சர்ம நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பசை (Medicinal Paste )

zacki-skin-paste-2-1-300x225

இயற்கையில் இருந்து கிடைக்கும் இயற்கை மூலிகை மூலகங்களை பயன்படுத்தி மனிதர்கள் மற்றும் மிருகங்களை பாதிக்கும் சர்ம நோய்களை பூரணமாக குணப் படுத்தக் கூடிய தேசிய ஆயுர்வேத மருத்துவ பசை (Medicinal Paste ) ஐ பாடசாலை மாணவன் கண்டுபிடித்துள்ளார்.

குருநாகல் பரகஹதெனிய தேசிய பாடசாலையில் உயர் தரம் கற்கும் எம். டி . எம் . சகி லதீப் எனும் மாணவன் உயர் தர செயற்திட்டத்திற்கு (project) தெரிவு செய்த இலக்கு மற்றும் ஆய்வுகளின் முடிவாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றிற்கு உரிமை பெற்றுள்ளார். இப்பாகமுவ தேதிலியங்க பிரதேசத்தில் வசித்து வரும் இம் மாணவன் சாதாரண தர கல்வியை கு / இப் / மடிகே முஸ்லிம் மகா வித்யாலயத்தில் பயின்றார்.

M-.D.M.-Zacki-Latheef-150x150இவர் தனதுகருத்தை இவ்வாறு தெரிவித்தார் .
நான் உயர் தரம் கற்கும் பரகஹதெனிய தேசிய பாடசாலையில் உயர் தர செயற்திட்டத்திற்கு நான் தெரிவு செய்தது இயற்கை மூலிகை மூலகங்களை பயன்படுத்தி சர்ம நோய்களுக்கான மருந்து. இதை இறுதியில்

புதிய கண்டுபிடிப்பொன்ராக அறிமுகம் செய்ய முடிந்தது.

நான் சிறு வயதில் இருந்தே விஞ்ஞானி ஆவதை இலக்காக வைத்திருந்தேன். உண்மையாக நான் மருத்துவ துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். இதனாலேயே நான் புதிய கண்டுபிடிப்பொன்றை தயாரிக்க முடிந்தது .

குணப் படுத்த முடியாத சர்ம நோய்கள் மற்றும் விட்டு விட்டு வரும் சர்ம நோய்களைஇம் மருந்து பூரணமாக குணப் படுத்தும் . இலங்கையில் 100 கு 10% ஆன மனிதர்களை தாக்கும் இந்த சர்ம வியாதியானது மனிதர்களை உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் உள ரீதியாகவுக் தாகுகின்றது. இம் மகா பிரச்சினைக்கு தீர்வு காண நான் நினைத்தேன்.

எனது இந்த தேசிய மருத்தவ முறையின் கீழ் தயாரித்த ஆயுர்வேத பசை ஆனது மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படும் சர்ம நோய்களை பூரணமாக குணப்படுத்த முடிகின்றது. எனது இந்த கண்டுபிடிப்பை பதிவு செய்து காப்புரிமையும் பெற்றுள்ளேன் . இதற்கு நான் சக்கி இஸ்கின் பேஸ்ட் என பெயரிட்டுள்ளேன்.

நகச் சுற்றி , விரல்களுக்கு இடையில் ஏற்படும் தோற்று , வெடிப்பு , தழும்பு, புதிய மற்றும் நாள் பட்ட சொறி சிரங்கு , கழுத்து இடுப்பு கக்கம் போன்ற இடங்களில் ஏற்படும் கருப்பு சாம்பல் நிற மாற்றம், முகப் பருக்கள் , செவ்வாப்பு , கட்டிகள், அரிப்பு , பூச்சிக் கடிகள், உள்ளங் கால் வெடிப்பு, வாத மற்றும் அடி காயங்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், தேம்மல் , அமைத் தளும்பு ஆகிய சர்ம நோய்களை இம் மருத்துவ பசை இனால் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி மிக குறைந்த காலத்தினுள் பூரணமாக குணப் படுத்த முடியும். எனது இந்த மருத்துவ பசையில்

மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்று உண்ணாட்டு மருத்துவ நிறுவகம் கொழும்பு பல்கலைக் கலக்கம் – ராஜகிரிய மற்றும் மற்றும் 2013 சகசக் நிமவும் தேசிய புத்தாகுனர் கண்காட்சியிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புகள் கிடைத்தால் இந்த கண்டு பிடிப்பை சந்தை படுத்த உதவியாக அமையும்.

எனது இந்த மருந்து கண்டு பிடிப்பை அறிமுகம் செய்வதன் மூலம் எனக்கு உதவிய எனது தந்தை எ . எல் . எம் . தருக், சகோதரி எம் . டி . எப் . சகீகா மற்றும் மருத்துவ ஆராய்சிகள் செய்த உண்ணாட்டு மருத்துவ நிறுவகம் கொழும்பு பல்கலைக் கலக்கம் – ராஜகிரிய இன் Dr . நஜீப், Dr . சல்மா மற்றும் பண்டாரநாயக ஞாபகார்த ஆயுர்வேத ஆய்வு நிறுவகம் – மகரகம இன் Dr . ரணவீர கும் குருநாகல் தனியார் யூனானி Dr . ரசானா கும் பாடசாலையில் பரீஹா , ரிம்சியா ஆசிரியைகளுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .

இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி Daily Lankadeepa பத்திரிகையில் 01 Feb 2014 – பக்கம் 13 இல் பிரசுரிக்கப் பட்டிருந்தமை குருப்பிடத்தக்கது.

1801074_10201635629198188_728723429_n

One comment

  1. என்னுடைய இந்த புதிய கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை பகிர்ந்த உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மேலும் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக…. ஆமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top