News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » இறுதி போட்டியில் சுருண்டது பாகிஸ்தான் – ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

இறுதி போட்டியில் சுருண்டது பாகிஸ்தான் – ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 260 ஒட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக பவாட் அலாம் ஆட்டமிழக்காது 114 ஒட்டங்களையும், மிஸ்பா 65 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 56 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

261 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஒவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமன்னே 101 ஒட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top