News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…

இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…


காதியானிஸம் அல்லது அஹமதிஸம் எனப்படும் கொள்கைக்கு எதிரான மாபெரும் மாநாடொன்று எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

“இறுதி நபித்துவப் பாதுகாப்பு மாநாடு” எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றவுள்ள இந்த மாநாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“இறுதி நபித்துவத்திற்கு சவாலாக இருக்கும் காதியானிகள் எனும் அஹமதியாக்கள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்?” என்பது பற்றி தெளிவுபடுத்தும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி சிறப்புரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் காதியானிகள் / அஹமதியாக்கள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்? என்பது பற்றி RRT Publication வெளியீடு செய்யும் “WHY THE AHAMADIYYA JAMATH / QAADIYANIES ARE NOT MUSLIM?” எனும் தலைப்பில் மும்மொழியிலான நூலும் இந்த நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இம்மாநாட்டில் பிரபல உலமாக்கள், பிர மாத மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை, மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் காதியானிகள் செறிந்து வாழும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நீர்கொழும்பில் பிரதேசத்தில் இந்த மாபொரும் மாநாடும், நூல் வெளியீடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top