News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு

இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு


இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது.

பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது.

131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் 18 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றை இலங்கை கைப்பற்றியுள்ளது.

இலங்கை துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 52 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 24 ஓட்டங்களையும், திஸர பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, அஸ்வின், ரெய்னா மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் ரோஹித் சர்மா 29  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை பந்துவீச்சில் குலசேகர, ஹேரத் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2009 மற்றும் 2012 இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து  கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. sfsa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top