News Headlines
You are here: Home » அயலூர் » இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


அத்தனகல்லைப் பிரதேச சபையின் குப்பை கூளங்களினால் பிரதேச சூழல் மாசடைவதாக தெரிவித்து கஹட்டோவில் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கஹட்டோவிட்ட ஹிஜ்ரா மாவத்தை மற்றும் மாளிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் ஊர்வாரியாக சேகரிக்கப்படுகின்ற கூளங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இப்பிரதேசத்தில் பாரியளவில் நீர் மாசடைவதாகவும், நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பல முறை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

இருப்பினும், உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாததனால் எழுந்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இன்று இந்த கவனயீர்ப்புப் ஆர்ப்பட்ட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில் இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களும் அயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மக்களும் இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

01 02 03 04 05 06

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top