News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்! Photos

அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்! Photos


அளுத்கம முஸ்லிம்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து  இந்தியாவின் சென்னை நகரிலுள்ள  இலங்கை தூதரகத்தின் முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை நடாத்தியுள்ளனர்.

இலங்கை – அளுத்கம, பேருவலை, தர்கா நகர், களுத்தரை உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் பொதுபல செனாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான மிலேச்சத் தனமான தாக்குதலை கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட இப் போராட்டத்தில் கண்டன உரையாற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. கோவை ஆர். ரஹ்மதுல்லாஹ், பொது பல சேனா என்ற அமைப்பினர் அமைதியான இலங்கை மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூவி, அப்பாவி சிங்கள இளைஞர்களை மூலைச் சலவை செய்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தூண்டி விட்டுள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளை உடைத்து, முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தகர்த்து, சூரையாடி, தீ வைத்து அழித்து வந்த இவர்கள் முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் ஆடைக்கு எதிராகவும், குர்ஆனை பல முறை அவமதித்தும், முஸ்லிம்களின் இருப்புரிமையை கேள்விக்குறியாக்கும் விதமாக தாக்குதல் நடத்தியும் வருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலி பயங்கரவாதத்தை அழித்த இலங்கை அரசு, பொதுபல சேனா பயங்கரவாதிகளை கண்டும் காணாமல் இருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம்.  இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவரை உடனடியாக கைது செய்து உயர்ந்தபட்ச தண்டனையும் வழங்க வேண்டும்  எனவும் இலங்கை தூதரகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10372045_650232151734268_8848869244353839088_n 10402849_650232135067603_5674131085063712601_n 10437449_650232188400931_6426456086026946696_n 10462585_650232355067581_3028497675264404514_n 10479202_650232241734259_8267219885889514307_n 10492528_650232521734231_6680541697208071383_n 20140617_113942_resized-1024x576 20140617_114307_resized 20140617_114613_resized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top