News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » அல் -அஸ்ஹர் மாணவன் அஹ்சனின் ஜனாஸாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்-படங்கள்

அல் -அஸ்ஹர் மாணவன் அஹ்சனின் ஜனாஸாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்-படங்கள்


அல் -அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மாணவன் முஹம்மட் அஹ்சன் (13 வயது) அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5:30 மணியளவில் திஹாரிய ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.

இதன்போது ஜனாஸாவில் ஊர்மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டமை எம்மால் அவதானிக்க முடிந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திஹாரிய புளியமரத்தடி பள்ளிவாசல் பின்னால் அமைத்துள்ள ரம்புட்டான் மரத்தில் ஏறியபோது தவறி விழுந்த முஹம்மட் அஹ்சன் அன்றுமுதல் கோமா நிலையில் வைத்தியசாலை ICU வில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைகள் பலனின்றி காலமானார்.

முன்னைய செய்தி

THR 07 THR 01 THR 02 THR 03 THR 04 THR 05 THR 06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top